தமிழகம்

தோழமை கட்சிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை: தவெக தலைமையில் புதிய கூட்டணி உதயம்

செய்திப்பிரிவு

சென்னை: தவெக அரசுக்கு ஆதர​வளித்​துள்ள கூட்டணி கட்சிகளுடன் சென்னை அடுத்த கோவளத்​தில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று முதல்​வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தவெக தரப்​பில் அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, நிர்மல் குமார் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் கலந்து கொண்டனர். கூட்டணி கட்​சிகள் சார்​பில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், விசிக தலை​வர் திரு​மாவளவன், மதிமுக பொதுச் செய​லா​ளர் வைகோ, ஐயுஎம்​எல் தலை​வர் காதர் மொய்​தீன் பங்​கேற்​றனர். மேலும், நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் ப.சிதம்​பரம், பிர​வீன் காந்​தி, ஜோதி​மணி, ராபர்ட் ப்ரூஸ், துரை வைகோ, நவாஸ் கனி, அமைச்​சர்​கள் விஸ்​வ​நாதன், ராஜேஷ்கு​மார், வன்​னியரசு, ஷாஜ​கான், ஐயுஎம்​எல் பொதுச் செய​லா​ளர் முகமது அபுபக்​கர், விசிக துணை பொதுச் செய​லா​ளர் சிந்​தனை செல்​வன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இந்த கூட்​டத்​தில் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் பங்​கேற்​க​வில்​லை.

மாலை 4 மணிக்கு தொடங்கி 5 மணி வரை ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. அப்போது தவெக ஆதரவு கட்​சிகளை ஒரு முறை​யான கூட்​ட​ணி​யாக உரு​வாக்க வேண்​டும். இந்த கூட்​ட​ணிக்கு ஒரு பெயரைச் சூட்​டி, அதற்​கென ஒரு ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்க வேண்​டும் எனத் தலை​வர்​கள் வலி​யுறுத்தி பேசினர். மேலும், அனைத்து மாவட்​டங்​களி​லும் ஒருங்​கிணைப்​புக் குழுக்​களை அமைத்​து கூட்​டணி கட்​சிகளுக்கு இடையே அடிமட்ட அளவில் இணக்​கத்தை ஏற்​படுத்த வேண்​டும் என ஆலோ​சிக்​கப்​பட்​டது. மேலும், வரவிருக்​கும் உள்​ளாட்​சி தேர்​தல் மற்​றும் இடைத்​தேர்​தல்​களில் இந்த கூட்​டணி இணைந்து செயல்​பட்டு வெற்​றியை உறுதி செய்​வது குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

தொடர்ந்து முதல்​வர் விஜய், கூட்​ட​ணிக்​காக தான் வைத்​திருக்​கும் பெயர் குறித்து தலை​வர்​களிடம் ஆலோ​சித்​தார். மேலும், தவெக தலை​மையி​லான அரசு மதச்​சார்​பின்மை கொள்​கை​யில் என்​றும் உறு​தி​யாக இருக்​கும். லஞ்​சம் மற்​றும் ஊழலற்ற வெளிப்​படை​யான ஆட்​சி​யைத் தொடர்ந்து வழங்​கு​வ​தில் எவ்​வித சமரச​மும் செய்து கொள்​ளப்​ப​டாது என விஜய் உறுதி அளித்​தார்.

ஆலோ​சனை கூட்​டத்​துக்கு பிறகு கூட்டணி கட்​சிகளின் சார்​பில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் கூறிய​தாவது: இக்​கூட்​டத்​தில் கூட்​ட​ணி​யைச் சிறப்​பாக வழிநடத்த ஒருங்​கிணைப்​புக் குழுவை அமைக்க வேண்​டும். கூட்​ட​ணிக்​கென ஒரு பொது​வான செயல்​பாட்​டுத் திட்​டத்தை வகுக்க வேண்​டும். கூட்​ட​ணிக்​கான பெயரைச் சூட்​டு​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. மிக விரை​வில் நடை​பெறவுள்ள அடுத்த கூட்​டத்​தில், மேற்​கண்ட மூன்று விஷ​யங்​கள் குறித்து இறுதி முடிவு​கள் எடுக்​கப்​படும். கூட்​ட​ணிக்​கான பெயர் கூடிய விரை​வில் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முதல்​வர் விஜய் கூட்​டத்​தில் பேசும் போது, “தவெக ஆட்சி 2 மாதங்​கள், 6 மாதங்​கள்​ கூட நிலைக்​காது என்​றார்​கள்​. ஆனால்​, இந்​த ஆட்​சி 5 ஆண்​டு​கள்​ வரை நீடிக்​கும்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT