தமிழகம்

பால் கொள்முதலை அதிகரிக்க உரிய நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இது தொடர்​பாக துறை​கள் வாரி​யாக முதல்​வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி​முதல் ஆலோ​சனைக் கூட்​டங்​களை நடத்​திவரு​கிறார்.

அதன்​படி கால்​நடை பராமரிப்​பு, பால்​வளம் மற்​றும் மீன்​வளத் துறை​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் மரிய வில்​சன், சி.​விஜயலட்​சுமி, ஸ்ரீ​நாத், செ.கமலி, தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும் துறை சார்ந்த செயலர்​கள், அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

இந்​தக் கூட்​டத்​தில் பால்​வளம், மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்​புத் துறை​களில் நடந்து வரும் திட்​டப் பணி​களின் செயல்​பாடு​களை கேட்​டறிந்த முதல்​வர் விஜய், மீனவர்​கள் மேம்​பாட்​டில் தனிக்​கவனம் செலுத்த வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதுத​விர ஆவின் மூலம் பால்கொள்​முதலை அதி​கரிக்​க​வும், தனி​யார் நிறு​வனங்​களுக்கு இணை​யாக ஆவினை மேம்​படுத்​த​வும், ஆவினில் உள்ள குறை​பாடு​களை துரித​மாக சரிசெய்​ய​வும் அலு​வலர்​களுக்கு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

மேலும், பால் கொள்​முதல் விலையை அதி​கரிப்​பது தொடர்​பாக விரை​வில் முடிவு எடுக்​கப்பட உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. அதே​போல நெடுஞ்​சாலைத் துறை குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த வாரம் நடந்​தது.

இதில் தேசிய அளவில் தமிழகத்​தில் சாலை விபத்​துகள் அதி​க​மாக நடை​பெறுகின்​றன. எனவே, சாலை விபத்​துகளை குறைக்க தனி செயல் திட்​டம் உரு​வாக்க வேண்​டுமென முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

மேலும் தமிழகத்​தில் அதி​விரைவு சாலைகளை அமைக்க விரை​வில் திட்​டங்​களை வடிவ​மைக்​க​வும், நகர்ப்​புற வளர்ச்​சியை அடிப்​படை​யாகக் கொண்டு சாலை வசதி​களை ஏற்​படுத்த 10 ஆண்​டு​களுக்​கான செயல்​திட்​டத்தை தயார் செய்​ய​வும் அதி​காரி​களுக்கு முதல்​வர் அறி​வுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது. துறை​கள் வாரி​யான ஆலோ​சனைக் கூட்​டம் ஜூலை 22-ம்​ தேதி வரை தொடர்ந்​து நடத்​தப்​பட உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT