சென்னை புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அருகில் சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்

 
தமிழகம்

புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு: கைதிகளுக்கான உணவை சாப்பிட்டுப் பார்த்து குறைகளை கேட்டறிந்தார்

செய்திப்பிரிவு

சென்னை: புழல் மத்​திய சிறை​யில் முதல்​வர் விஜய் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். கைதி​களிடம் குறை​களைக் கேட்​டறிந்​தார்.

நாட்​டின் மிகப்​பெரிய சிறைவளாகங்​களில் ஒன்​றான சென்னை புழல் மத்​திய சிறைக்கு முதல்​வர் விஜய் நேற்று காலை வந்து ஆய்வு மேற்​கொண்​டார். மத்​திய சிறை-1ல் அமைந்​துள்ள தொற்​றுத் தடை காப்​புப் பகு​தி, பார்​வை​யாளர் அறை, போதை ஒழிப்பு மறு​வாழ்வு மையம் ஆகிய​வற்​றைப் பார்​வை​யிட்​டு, கட்​டமைப்பு வசதி​களை ஆய்வு செய்​தார்.

வளாகத்​தில் உள்ள நவீன மருத்​து​வ​மனையைப் பார்​வை​யிட்​டு, கைதி​களுக்கு வழங்​கப்​படும் சிகிச்​சைகள் குறித்து மருத்​து​வர்​களிடம் கேட்​டறிந்​தார். சிறை வளாகத்​தில் உள்ள மகாத்மா காந்தி சமு​தாயக் கல்​லூரி​யின் வகுப்​பறை​கள், நூல​கம், மேம்​பட்ட கணினி பயிற்சி மையங்​களைப் பார்​வை​யிட்​டார். தூக்​குமேடை பகு​தி​களை​யும் சென்று பார்த்​தார்.

பின்​னர், கைதி​கள் தொழிற்​கூடத்​துக்​குச் சென்​றார். விசைத்​தறிக் கூடத்​தில் நெய்​யப்​பட்ட போர்​வை​களைப் பார்த்​தார். தையல் பிரி​வில் உடைகள் தைக்​கப்​படும் முறை​களை​யும் பார்​வை​யிட்​டு, கைதி​களின் தையல் திற​னைப் பாராட்​டி​னார்.

கைதி​களுக்கு வழங்​கப்​படும் உணவை சாப்​பிட்​டுப் பார்த்​து, சமையல் அறை​யின் தூய்​மை, உணவின் தரத்தை தொடர்ந்து நன்கு பரா​மரிக்​கு​மாறு அதி​காரி​களிடம் வலி​யுறுத்​தி​னார்.

கைதி​களை சந்​தித்​து, தேவை​கள், குறை​கள் குறித்து கேட்​டறிந்​தார். அவற்றை உடனே சரிசெய்​யு​மாறு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார். “கை​தி​களை தண்​டிப்​ப​தை​விட, தண்​டனைக் காலத்​தில் அவர்​களை நல்​வழிப்​படுத்​து​வதே முதன்​மை​யான நோக்​க​மாக இருக்க வேண்​டும்” என்​றும் அறி​வுறுத்​தி​னார்.

புழல் காவல் நிலையத்தில் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து ஆய்வாளரிடம் கேட்டறிந்த முதல்வர். உடன் காவல் இணை ஆணையர் திஷா மிட்டல்.

பின்னர், சிறையை ஒட்​டி​யுள்ள புழல் காவல் நிலை​யத்​துக்கு சென்று, காவல் நிலைய நடை​முறை​கள் குறித்து ஆய்​வாளர் வசந்த் ராஜா​விடம் கேட்​டறிந்​தார். “பு​கார் கொடுக்க வரும்மக்​களிடம் கனி​வாக நடக்க வேண்​டும். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை எடுக்குமாறு அறி​வுறுத்​தினார். கணினி அறை, கைதி​கள் அடைக்கும் அறையை​யும் பார்​வை​யிட்​டார்.

சிறைத் துறை டிஜிபி சந்​தீப்ராய் ரத்​தோர், அப்​பிரி​வின் சென்னை சரக துணைத் தலை​வர் பழனி, சிறைக் கண்​காணிப்பாளர் கிருஷ்ண​ராஜ், காவல் இணை ஆணை​யர் திஷா மிட்​டல்உள்​ளிட்ட அதி​காரி​கள் உடன் இருந்​தனர்.

SCROLL FOR NEXT