கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. சென்னை மயிலாப்பூரில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவிகள்.

 

படங்கள்: எஸ். சத்தியசீலன்

தமிழகம்

“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” - முதல்வர் விஜய் வாழ்த்து

அனலி

சென்னை: “கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து அனைத்து வித​மான பள்ளி​களும் இன்று (ஜூன் 4) திறக்​கப்பட்டன. தமிழகத்​தில் இந்தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடத்​தப்​பட்​டது.

இதன் காரண​மாக பள்ளி மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே நடத்தி முடிக்​கப்​பட்​டன. அதன்​படி பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு மார்ச் 2 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை​யும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்​ரல் 1 முதல் 16-ம் தேதி வரை​யும் தேர்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

தொடர்ந்து பள்ளி மாணவர்​களுக்கு ஏப்​ரல் 17-ம் தேதி முதல் கோடை விடு​முறை விடப்​பட்​டது. இந்த நாட்​களில் தமிழக அரசு சார்​பில் மாணவர்​கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​பட்​டன.

கோடை விடு​முறை முடிந்து பள்​ளி​கள் இன்று திறக்கப்பட்டன. இதனையொட்டி மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT