தமிழகம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து

தமிழினி

சென்னை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவாகியும் கூட பெரும்பான்மை நிரூபிக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாமல் தவித்தபோது, முதன்முதலில் ஆதரவுக் கரம் நீட்டி தவெக பலத்தை உயர்த்தியது காங்கிரஸ் தான்.

அதற்குப் பிரதிபலனாக காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்களைக் கொடுத்தது தவெக. தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. இப்போது இண்டியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்பது காங்கிரஸில் விருப்பமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT