வடபழனி - பூந்த மல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் விஜய் உடன் பிரதமர் மோடி இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மெட்ரோ ரயிலில் இருவரும் பயணித்தனர். அப்போது, மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

 
தமிழகம்

‘கல்வி நிதி ரூ.5,110 கோடியை விடுவிக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​துக்கு மத்​திய அரசு தர வேண்​டிய கல்வி நிதி ரூ.5,110 கோடியை எந்​த​வித நிபந்​தனை​யும் இன்றி விடுவிக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் விஜய் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் ரூ.13 ஆயிரம் கோடி​யில் புதிய திட்​டங்​கள் அடிக்​கல் நாட்​டு​தல் மற்​றும் நிறைவடைந்த திட்​டங்​களை திறந்​து வைக்கும் விழா சென்னை ஐஐடி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

அப்​போது, பிரதமர் மோடி முன்​னிலை​யில் முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: மத்​திய, மாநில அரசுகள் இணைந்து செயல்​படும்​போது அதன் பலன் நேரடி​யாக மக்​களின் வாழ்க்​கை​யில் பிர​திபலிக்க வேண்​டும் என்​பதே நமது அணுகு​முறை. தமிழகத்​தில் வளர்ச்​சி​யின் பயன் சென்​னையைத் தாண்டி மாநிலத்​தின் அனைத்து மாவட்​டங்​களுக்​கும் சென்​றடைய வேண்​டும் என்ற நோக்​கில் செயல்​படு​கிறோம்.

வருங்​காலத்​தில் மேற்​கு, தெற்​குப் பகு​தி​களின் பொருளா​தார வளர்ச்​சிக்கு உதவும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்​டத்தை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். இரு மாநிலங்​களின் நலனுக்​காக, தமிழகத்​தில் உள்ள ஓசூரில் இருந்து கர்​நாட​கா​வில் உள்ள பொம்​மசந்​திரா வரை மாநிலங்​களுக்கு இடையே​யான மெட்ரோ ரயில் திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்க வேண்​டும்.

2026 மத்​திய பட்​ஜெட்​டில் பெங்​களூரு, ஹைத​ரா​பாத் மற்​றும் சென்னை இடையே 2 அதிவேக ரயில் வழித்​தடங்​களை அறி​வித்த பிரதமருக்கு நன்​றி. சுற்​றுலா துறையை மேம்​படுத்​தும் வகை​யில், சென்​னை​யில் இருந்து கன்​னி​யாகுமரி மற்​றும் கோவை வரை அதிவேக ரயில் வழித்​தடத்​துக்​கும் ஒப்​புதல் அளிக்க வேண்​டும்.

செங்​கல்​பட்டு முதல் திருச்சி வரையி​லான ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்​சாலை 81-ன் திருச்​சி, பஞ்​சப்​பூர், ஜெயபுரம், கரூர் பகு​தி​கள், கரூர்​-கோவை பகுதி ஆகிய​வற்றை 6 வழிச் சாலைகளாக மாற்​று​வது மற்​றும் தேசிய நெடுஞ்​சாலை 87-ல் மாதவரம் - சோழ​வரம் வரை உயர்​மட்​டப் பாலம் அமைப்​பது ஆகிய திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் ஒப்​புதல் அளிக்க வேண்​டும்.

கோதாவரி-​கா​விரி இணைப்​புத் திட்​டத்தை தேசி​யத் திட்​ட​மாகச் செயல்​படுத்த வேண்​டும். சென்னை உயர் நீதி​மன்ற நடவடிக்​கை​களில் தமிழை முதன்மை மொழி​யாகப் பயன்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். சமக்ர சிக் ஷா அபி​யான் திட்​டத்​தின்​கீழ், தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய ரூ.5,110 கோடியை எந்​த​விதநிபந்​தனை​களும் இன்றி உடனடி​யாக விடுவிக்​க வேண்​டும்​. இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT