பேரவையில் நேற்று சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் முதல்வர் விஜய்.

 
தமிழகம்

கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? - பேரவையில் உதயநிதியின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்

செய்திப்பிரிவு

சென்னை: ​கா​விரி நீர் பங்​கீடு, மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக உரிமையை ஒரு​போதும் விட்​டுத்தர மாட்​டோம். இந்த விவ​காரத்தை சட்​டப்​படி அணுகு​வ​தில் உறு​தி​யாக உள்​ளோம். எனினும், பகை நாடு​களே பிரச்​சினை​களை பேசித் தீர்க்​கும்​போது, பக்​கத்து மாநிலத்​துடன் பேசிப் பார்த்​தால் என்ன என்​று​தான் கர்​நாடகா செல்ல முயற்​சித்​தேன் என்று பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் எழுப்​பிய கேள்விக்கு முதல்​வர் விஜய் விளக்​கம் அளித்​தார்.

காவிரி விவ​காரம் குறித்து சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று சிறப்பு கவன ஈர்ப்​புத் தீர்​மானம் கொண்​டு​வந்து வாதத்தை தொடங்கி வைத்​தார். தொடர்ந்து நடை​பெற்ற விவாதம்:

உதயநிதி: மேகே​தாட்டு அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாட​கா​வைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? முழு பயிர்க்​கடன் தள்​ளு​படி என தேர்​தல் வாக்​குறுதி அளித்து ஆட்​சிக்கு வந்​து​விட்​டு, அரைகுறை​யாக தள்​ளு​படி செய்​வது ஏன்? காவிரி​யில் தண்​ணீர் வராத​தால் குறுவை சாகுபடி இல்​லாமல் போய்​விட்​டது. விவ​சா​யிகளுக்கு இதற்​கான நிவாரணத் தொகையை அரசு எப்​போது தரும்? டெல்​டாவை வறட்சி பாதித்த மாவட்​டங்​களாக அறி​வித்து, விவ​சா​யிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்​டும்.

தவெக ஆட்சி அமைந்​தது முதலே மேகே​தாட்டு அணை கட்​டு​வ​தில் இது​வரை காட்​டாத வேகம், தீவிரத்தை கர்​நாடக அரசு காட்டி வரு​கிறது. மத்​திய நிதி அமைச்​சர், ஜல்​சக்தி துறை அமைச்​சர் உள்​ளிட்​டோரை கர்​நாடக முதல்​வர் சிவகு​மார் சந்​தித்து கோரிக்கை வைத்​துள்​ளார். மேகே​தாட்டு அணை கட்ட தமிழக அரசின் அனு​மதி தேவை​இல்லை என்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய ஜல்​சக்தி இணை அமைச்​சர் கூறி​யுள்​ளார். அதன்​பிறகு, கர்​நாட​கா​வில் அனைத்​துக் கட்சி கூட்​டத்தை முதல்​வர் சிவகு​மார் கூட்​டி​யுள்​ளார். இப்​படி படிப்​படி​யாக பல நடவடிக்​கைகளை கர்​நாடக அரசு எடுத்​துள்​ளது.

தீர்​மானம் மட்​டும் போதாது: ஆனால், தமிழக முதல்​வர் இதற்​காக ஒருமுறை மட்​டுமே பிரதமரிடம் கோரிக்கை வைத்​தார். இந்த அவை​யில் ஜூன் 19-ம் தேதி ஒரு தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அது மட்​டும் போதாது. மேகே​தாட்டு விவ​காரத்​தில் அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என்று திமுக உட்பட பல்​வேறு கட்​சிகளும் கோரிக்கை வைக்​கின்​றன. மாநில நலன் என வந்​தால், கர்​நாட​காவைப் போல, நாமும் கட்சி வேறு​பாடு​களைக் கடந்து ஓரணி​யில் நிற்க வேண்​டும். நாங்​கள் ஏற்​கெனவே கூறியது​போல, அனைத்​துக் கட்சி தலை​வர்​களு​டன் டெல்​லிக்கு சென்​றால்​தான் நம் ஒற்​றுமை​யைக் காண்பிக்க முடி​யும்.

நாங்​கள் தொடர்ந்து அழுத்​தம் கொடுத்த பிறகு ஜூலை 28-ம் தேதி 2-வது கடிதத்தை பிரதமருக்கு முதல்​வர் எழு​தி​யுள்​ளார். இந்த அரசு ஒரு புது டெக்​னிக்கை கடைபிடிக்​கிறது. ஏதாவது ஒன்றை செய்​வதற்கு முன்பு அதை கசியவிடு​கிறார்​கள். முதல்​வர் விஜய் கர்​நாடகா செல்​வ​தாக வேளாண் துறை அமைச்​சர் முதலில் தெரி​வித்​து​விட்​டு, பிறகு மறுத்​துப் பேசி​னார்.

பிறகு, அதி​காரப்​பூர்​வ​மாக எந்த முடி​வும் எடுக்​க​வில்லை என்று 2 அமைச்​சர்​கள் சொன்​னார்​கள். பின்​னர் 13 பேர் கொண்ட குழு செல்​வ​தாக கூறி​னார்​கள். அதன்​பின்​னர், ‘தமிழக முதல்​வர் இங்கு வரவேண்​டாம். தண்​ணீர் தரமுடி​யாது’ என்று கர்​நாடக முதல்​வர் சொல்​லி​விட்​டார். உண்​மை​யில், தமிழக முதல்​வர் கர்​நாடகா செல்ல இருந்​தா​ரா? அப்​படி​யா​னால் ஏன் செல்​ல​வில்​லை?

முழு பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்யவேண்​டும். விவ​சா​யிகளை சந்​தித்து முதல்​வர் பேசவேண்​டும். எங்​கள் ஆட்​சி​யில் 6.5 லட்​சம் ஹெக்​டேர் குறுவை சாகுபடி நடை​பெற்​றது. இந்த ஆட்​சி​யில் 1.5 லட்​சம் ஹெக்​டேர்​தான் சாகுபடி நடை​பெற்​றது. எத்​தனை பேருக்கு குறு​வைத் தொகுப்பு வழங்​கி​யுள்​ளனர் என்​பதை தெரிவிக்க வேண்​டும்.

அரசி​யல் செய்​யும் எண்​ணம் இல்லை

முதல்​வர் விஜய்: காவிரி விவ​காரத்தை வைத்து அரசி​யல் செய்​யும் எண்​ணம் எங்​களுக்கு துளி​கூட இல்லை. மேகே​தாட்டு விவ​காரத்​தில் நாம் சேர்ந்து கொண்​டு​வந்த தீர்​மானத்தை பிரதமரிடம் நேர்​முக கடித​மாக அளித்​துள்​ளோம்.

மத்​திய ஜல்​சக்தி இணை அமைச்​சர் மேகே​தாட்டு அணை பற்றி முழு விவரங்​களை குறிப்​பிட​வில்லை என தெரிந்​ததும், காவிரி நடு​வர் மன்ற இறுதி தீர்ப்பு மற்​றும் உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின் விவரங்​களை குறிப்​பிட்டு மேகே​தாட்டு திட்​டத்​துக்கு எவ்​வித அனு​ம​தி​யும் வழங்​கக் கூடாது என்று பிரதமருக்கு அடுத்த நாளே நேர்​முக கடிதம் எழு​தினோம். எனவே, காவிரி நீர் பங்​கீடு, மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக உரிமையை ஒரு​போதும் நாங்​கள் விட்​டுத்தர மாட்​டோம்.

அதே​நேரம், கர்​நாட​கா​வில் சில அணை​கள் கட்ட ஆரம்​பித்​த​போது இதே அவை​யில் கடந்த 1969-ம் ஆண்டு விவாதம் நடை​பெற்​றுள்​ளது. அப்​போது நீர்​வளத் துறை அமைச்​ச​ராக இருந்​தது யார்? அப்​போது அணை கட்ட விட்​டது ஏன்? என்​றெல்​லாம் கேட்டு மலி​வான அரசி​யல் செய்ய விரும்​ப​வில்​லை.

அவமானத்​தை​யும் தாங்​கத் தயார்: இந்த விவ​காரத்தை சட்​டப்​படி அணுகு​வ​தில் உறு​தி​யாக உள்​ளோம். எனினும், ஒரு முயற்சி எடுப்​போம் என நினைத்​து​தான் கர்நாடகா செல்ல முடி​வெடுத்​தேன். அந்த பயணம் பற்றி யோசித்​துக் கேட்​டது நான்​தான். பகை நாடு​களே பிரச்​சினை​களை பேசித் தீர்க்க பார்க்​கும்​போது, பக்​கத்து மாநிலத்​துடன் பேசிப் பார்த்​தால் என்ன என்​று​தான் கர்​நாடகா செல்ல முயற்​சித்​தேன். இதில் ஒரு​வேளை ஏதேனும் அவமானம் நேர்ந்​தால், தமிழக மக்​களுக்​காக அதை​யும் தாங்கத் தயா​ராக இருப்​ப​தாக சொன்​னேன்.

குறுவை சாகுபடிக்கு நிவாரணத் தொகுப்பு ஏற்​கெனவே கொடுத்​து​விட்​டோம். அரசி​யலே நாங்​கள்​தான் என்று கூறிக்​கொள்​பவர்​களுக்கு இது எப்​படி தெரி​யாமல் போனது. முன்​பின் செய்​தித்​தாள்​களைப் படித்​திருந்​தால் நாட்டு நடப்பு தெரிந்​திருக்​கும்.

உதயநிதி: குறு​வைத் தொகுப்பு திட்​டம் எல்லா அரசுகளும் கொடுப்​பது​தான். விவ​சா​யிகள் இப்​போது வறட்சி நிவாரணம் கேட்​கிறார்​கள். இதற்​கான வித்​தி​யாசத்தை தெரிந்​து​கொள்ள வேண்​டும். இதற்கு பேப்​பர் படித்​தால் மட்​டும் போதாது. அனைத்​துக் கட்சி கூட்​டம் கூட்​டி, விவ​சா​யிகளிடம் கலந்து பேசி கோரிக்​கைகளை தெரிந்​து​கொள்ள வேண்​டும். அனைத்​துக் கட்​சிக் கூட்டம் கூட்​டு​வ​தில் அரசுக்கு என்ன தயக்​கம்? டெல்​டாவை வறட்சி மாவட்​டங்​களாக அறி​வித்து நிவாரண நிதியை விரை​வில் வழங்​க வேண்​டும்​.

அமைச்​சர்​ செங்​கோட்​டையன்​: வறட்​சி நிதி குறித்​து பொது​வாக செப்​டம்​பரில்​தான்​ ஆலோ​சிக்​கப்​படும்​. இவ்​வாறு வி​வாதம்​ நடைபெற்​றது.

SCROLL FOR NEXT