துளசிமதி முருகேசன்

 
தமிழகம்

தங்கம், வெள்ளி வென்ற துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்கள்

மு.சக்தி

சென்னை: “ஜப்பான் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்ற துளசிமதி முருகேசனுக்கு அரசு சார்பில் ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்” என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அந்த அணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமை மிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT