தமிழகம்

தமிழக தேர்தல் 2026: ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் மனுக்கள் ஏற்பு

தமிழினி

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, காரைக்குடியில் சீமான், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் முதல்​வர் ஸ்டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர்.

          

அதன்​பின்​னர், 4 பொது விடு​முறை நாட்​களில் மனு தாக்​கல் நடை​பெற​வில்​லை. இந்​நிலை​யில், வேட்​புமனு தாக்​கல் செய்ய நேற்று கடைசி நாள் என்​ப​தால், அனைத்து தொகு​தி​களி​லும் காலை முதலே மனு தாக்கல் களை​கட்​டியது. எடப்​பாடி​யில் அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, விருத்​தாசலத்​தில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் ஆகியோர் வேட்புமனுக்​களை தாக்​கல் செய்​தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இத்தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதேபோல், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி, சாத்​தூரில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, காரைக்குடியில் சீமான் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவியின் சொத்துவிவரம் குறித்த சந்தேகங்களால் நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல். தியாகராய நகரில், தவெக வேட்பாளர் என்.ஆனந்த் வேட்புமனு ஏற்கப்பட்டது.

SCROLL FOR NEXT