தமிழகம்

மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு வரவேற்பு: முதல்வர்கள் அடங்கிய குழு அமைக்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புடன் சாதி​வாரிக் கணக்​கெடுப்​பை​யும் சேர்த்து நடத்​தத் திட்​ட​மிட்​டுள்ள மத்​திய அரசின் முடிவை வரவேற்​றுள்ள முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், இதற்​காக மாநில முதல்​வர்​கள் அடங்​கிய ஆலோ​சனைக் குழுவை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புடன், சாதி அடிப்​படையி​லான கணக்​கெடுப்​பை​யும் சேர்த்து நடத்​தத் திட்​ட​மிட்​டுள்ள மத்​திய அரசின் முடிவு மூலம் விரி​வான, நம்​பக​மான தரவு​களைப் பெற்​று, சமூக ஏற்றத்​தாழ்​வு​களை நிவர்த்தி செய்​ய​வும், நலத்​திட்​டங்​கள் உரிய​வர்​களுக்கு சென்று சேரு​வதை உறுதி செய்​ய​வும் இயலும். இது தமிழக அரசின் நீண்​ட​கால கோரிக்​கை​யுடன் ஒரு​மித்து இருப்​ப​தால், மத்​திய அரசின் இந்த நடவடிக்​கையை வரவேற்​கிறோம்.

மேலும், மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புடன், சாதி​வாரிக் கணக்​கெடுப்​பை​யும் சேர்த்து நடத்த மத்​திய அரசை வலி​யுறுத்​தும் தீர்​மானங்​கள் ஏற்​கெனவே தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றி, இந்​தக் கோரிக்​கை​யில் தமிழகம் முன்​னோடி​யாக உள்​ளது. இதுத​விர, மத்​திய அரசின் இந்த முடி​வானது, ஆதா​ரங்களின் அடிப்​படையி​லான சமூக நீ​திக்​கான தமிழகத்​தின் நிலைப்​பாட்டை உறுதி செய்​வ​தாக​வும் உள்​ளது.

இருப்​பினும், சாதி​வாரிக் கணக்​கெடுப்பு என்​பது ஆழமாக வேரூன்​றிய சமூக இயக்​க​வியல், பல்​வேறு மாநிலங்​களில் சாதிய கட்​டமைப்​பு​களி​லுள்ள வேறு​பாடு​கள் போன்​றவற்​றைக் கருத்​தில் கொண்டு மிகுந்த கவனத்​துடன் கையாளப்​ப​டா​விட்​டால், எதிர்​பா​ராத சமூகப் பதட்​டங்​களுக்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஏற்​படுத்​தக்​கூடிய உணர்​வுப்​பூர்​வ​மான விஷய​மாக உள்​ளது.

எனவே, இக்​கணக்​கெடுப்​பினை மேற்​கொள்​வதற்​கான கேள்வி​கள், பிரிவு​கள், துணைப்​பிரிவு​கள் மற்​றும் தரவு சேகரிப்பு வழி​முறை​கள் துல்​லிய​மாக​வும், தெளி​வான​தாக​வும் இருக்​கும்​ பட்​சத்​தில் மட்​டுமே, பொது நம்​பிக்​கையை உறுதி செய்ய முடி​யும். இல்​லா​விட்​டால், இந்த அம்​சங்​களில் ஏதேனும் குறை​பாடு​கள், சர்ச்​சைகள், துல்லியமின்மை அல்​லது பிளவுபட்ட கருத்​துக்​களை அதி​கரிக்​கக்​கூடும்.

மக்​கள் தொகை கணக்கெடுப்பு மத்​திய அரசின் பட்டியலில் இருந்​தா​லும், அதன் முடிவுகள் கல்​வி, வேலை​வாய்ப்​பு, இடஒதுக்​கீடு மற்​றும் நலத்​திட்​டங்​கள் குறித்த மாநில அளவி​லான கொள்​கைகளை ஆழமாகப் பாதிக்​கும்.

எனவே, இப்​பணி தொடர்​பான வினாப் படிவங்​கள் மற்​றும் வழி​முறை​கள் ஆகிய​வற்றை முடிவு செய்​வதற்கு முன், மத்​திய அரசு அனைத்து மாநிலங்​களுடன் கலந்​தாலோ​சிப்பது அவசிய​மாகும். இத்​தகைய ஆலோ​சனை, இந்த முக்​கிய​மான செயல்​பாட்​டில், யூனியன் பிரதேசங்​கள் மற்​றும் மாநிலங்​களின் பல்வேறு கண்​ணோட்டங்களை இணைக்​க​வும், குறிப்​பிட்ட நுணுக்​கங்​களைக் கணக்​கிடவும், கூட்​டாட்சியை வளர்க்​க​வும் உகந்​த​தாக இருக்​கும்.

எனவே, சாதி​வாரிக் கணக்​கெடுப்​புக்​கான வழி​காட்​டு​தல்​கள் குறித்து விவாதித்து மேம்படுத்த மாநில முதல்வர்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களின் பிர​தி​நி​தி​கள் அடங்​கிய ஆலோ​சனைக் குழுவை உருவாக்க வேண்​டும். இப்​பணி தொடர்​பான செயல்​முறை​யின் உணர்​திறனைப் பாது​காக்​க​வும், சமூக நீதியை மேம்​படுத்​து​வதற்​கான தரவு​களின் நம்​பகத்தன்​மையை உறுதி செய்​யவும், தேவைப்​படும் இடங்​களில் முன்​னோடி சோதனை (pilot study) உட்​பட, கட்​டமைப்பை வடிவ​மைப்​ப​தில் மிகுந்த கவன​முடன் செயல்பட வேண்​டும்.

தங்​களின்​கீழ் மேற்​கொள்​ளப்பட்​டுள்ள இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க நடவடிக்​கை, சமத்​துவம் மற்​றும் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய இந்​தி​யா​வின் உறு​திப்பாட்டை வலுப்​படுத்​த​வும், கூட்டாட்​சிக் கொள்​கைகளை நிலைநிறுத்​த​வும் பயன்​படுத்​தப்​படும் என்று நான் நம்​பு​கிறேன். இவ்​வாறு அந்தக் கடிதத்​தில் முதல்​வர் தெரிவித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT