திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்றது. இதற்கு கட்​சி​யின் தலைவரும் முதல்வரு​மான மு.க.ஸ்​டா​லின் தலைமை தாங்கி பேசினார். உடன், அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்.

 
தமிழகம்

கூட்டணிக் கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கூட்​ட​ணிக் கட்​சிகளில் நம்மை பிடிக்​காத சிலர், தேவை​யில்​லாத கருத்​துகளை பேசி குழப்பம் விளைவிக்க நினைக்​கலாம். அத்​தகைய சூழ்ச்​சிக்கு நாம் பலி​யாகி விடக் கூடாது என திமுக​வினருக்கு கட்​சி​யின் தலை​வரும் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தலைமை தாங்கி ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: எல்​லாரும் ஓய்​வின்றி தேர்​தல் பணிக்​குத் தயா​ராக வேண்​டும்.

          

ஆளுநர் உரை​யில் நாம் கடந்த 5 ஆண்​டு​களில் செய்த திட்​டங்​களைக் கூறி​யிருக்​கிறோம். இவ்​வளவு திட்​டங்​களை நிறைவேற்றி இருப்​ப​தால் எதை வைத்து அரசி​யல் செய்​வது என்று தெரி​யாமல் எதிர்க்​கட்​சிகள் திண்​டாடு​கின்​றன.

அதனால் வீண் அவதூறுகளைப் பரப்​பி, மக்​களை குழப்ப நினைக்​கிறார்​கள். இதற்கு நாம் இடம் தரக் கூடாது. தேர்​தல் நெருங்​கி​விட்​டது. இனி நம் சிந்​தனை, செயல் எல்​லா​வற்​றுலும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்​டும்​தான் இருக்க வேண்​டும்.

ஏதேனும் தவறு நடை​பெற்​றால் யாராக இருந்​தா​லும் நடவடிக்கை எடுக்க தயங்​க​மாட்​டேன். தனி​நபரைவிட கட்​சி தான்பெரிது. எல்​லாரும் ஒற்​றுமை​யாக பணி​யாற்ற வேண்​டும். உட்​கட்சி பிரச்​சினைகள் ஏதும் எழக்​கூடாது.

மக்​கள் குறைகளை சொன்​னால் பொறுமை​யாக பதிலளிக்க வேண்​டும். நம்கூட்​ட​ணிக் கட்​சிகளில் நம்மை பிடிக்​காத சிலர், தேவை​யில்​லாத கருத்துகளை பேசி, குழப்பம் விளைவிக்க நினைக்​கலாம். அத்தகைய சூழ்ச்​சிக்கு நாம் பலி​யாகிவிடக் கூ​டாது. கூட்​ட​ணி- தொகுதி பங்​கீடு-இதையெல்​லாம் நான் பார்த்​துக் கொள்கிறேன்.

100 சதவீத உழைப்​பைத்தர வேண்​டும். இந்​தி​யா​விலேயே பாஜக வுக்கு சவாலாக இருப்​பது திமுக​தான். எனவே நம்மை வீழ்த்த பல்​வேறு சதித் திட்​டங்​கள் நடக்கும். அவற்றை உடைத்​து, ஒரு வலிமை​யான கட்​சி​யாக இருக்க வேண்​டுமெனில் அடுத்த 3 மாதத்​துக்கு உழைப்​பு, பொறுமை அவசியம். இவ்​வாறு பேசி​னார்.

மேலும் வீடு, வீடாக பெண்​களை கொண்டு பரப்​புரை மேற்​கொள்​ளுதல், வாக்​குச்​சாவடி குழு​வுக்​கான பயிற்சி மாநாட்டை நடத்துதல், தேர்​தலுக்​கான மாநாட்டை திருச்​சி​யில் மார்ச் 8-ல் நடத்​துதல் ஆகிய தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

SCROLL FOR NEXT