பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை நேற்று திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர். படம்: எல்.பாலச்சந்தர்

 
தமிழகம்

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: பரமக்​குடி​யில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்​டபத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார்.

ராம​நாத​புரம் மாவட்​டம், பரமக்​குடி நகராட்​சிக்கு சொந்​த​மான சந்தை வளாகப் பகு​தி​யில் செய்தி மக்​கள் தொடர்​புத் துறை சார்​பில் ரூ.3 கோடி மதிப்​பில், தியாகி இமானுவேல் சேகரன் உரு​வச் சிலை​யுடன் கூடிய மணி மண்​டபம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மண்​டபத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். தொடர்ந்​து, இமானுவேல் சேகரனின் சிலைக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் மணி மண்​டபத்தை பார்​வை​யிட்​டார். இந்த நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், கே.ஆர்​.பெரியகருப்​பன், மு.பெ.சாமி​நாதன், கயல்​விழி செல்​வ​ராஜ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிர​தி​நிதி ஏ.கே.எஸ்​.​விஜயன், எம்​.பி.க்​கள் நவாஸ்​க​னி, ராணி ஸ்ரீகு​மார், எம்​எல்​ஏக்​கள் காதர்​பாட்சா முத்​து​ராமலிங்​கம், செ.​முரு​கேசன், ராஜா, தமிழரசி, கிருஷ்ண​சாமி, ஸ்டா​லின்​கு​மார், முத்​து​ராஜா, மக்​கள் விடு​தலைக் கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் முரு​கவேல்​ராஜன், தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறைச் செயலர் ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்​புத் துறை இயக்​குநர் வைத்​தி​ய​நாதன், ராம​நாத​புரம் ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன், நகராட்சி உறுப்​பினர் கனி​மொழி துரை​முரு​கன், இமானுவேல் சேகரனின் மகள் சுந்​தரி பிர​பா​ராணி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வர் மணிமண்​டபத்தை திறந்து வைத்​ததை தொடர்ந்​து, ஏராள​மான பொது​மக்​கள் மணிமண்​டபத்தை பார்​வை​யிட்​டனர். முதல்​வர் வரு​கை​யையொட்டி சட்​டம், ஒழுங்கு கூடு​தல் டிஜிபி மகேஷ்வர் தயாள், தென்​மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதா​ரி, ராம​நாத​புரம் சரக டிஐஜி தேஷ்​முக் சேகர் சஞ்​சய், காவல் கண்​காணிப்​பாளர் ஜி.சந்​தீஷ் உட்பட 2,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

முன்​ன​தாக, தெளிச்​சாத்த நல்​லூரிலிருந்து பரமக்​குடி தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்​டபம் வரை 5 கி.மீ. தொலை​வுக்கு சாலை​யின் இரு​புற​மும் தி​முக​வினர் மற்​றும்​ பொது​மக்​கள்​ திரண்​டு நின்​று முதல்​வரை வரவேற்​றனர்​.

SCROLL FOR NEXT