கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலினுடன் ‘செல்ஃபி’ எடுத்து கொண்ட பொதுமக்கள்.

 
தமிழகம்

கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணை பகுதியில் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

படகு சவாரி செய்து மகிழ்ந்த குடும்பத்தினர்

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் மனோரஞ்​சிதம் அணை பகு​தி​யில் நடை ​ப​யிற்சி சென்ற முதல்​வர் ஸ்டா​லின், அங்கு காத்​திருந்த பொது​மக்​களு​டன் கலந்​துரை​யாடி​னார். முதல்​வரின் குடும்​பத்​தினர் ஏரி​யில் படகு சவாரி செய்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிவடைந்​துள்ள நிலை​யில் கொடைக்​கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்​வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​துடன் முதல்​வர் ஸ்டா​லின் வந்​துள்​ளார்.

நேற்று முன்​தினம் காலை நட்​சத்​திர ஏரி பகு​தி​யில் தனது குடும்​பத்​தினருடன் முதல்​வர் நடைப​யிற்சி மேற்​கொண்​டார். அதன் பிறகு விடு​திக்​குச் சென்ற அவர், நாள் முழு​வதும் அறை​யிலேயே தங்கி ஓய்​வெடுத்​தார்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினர்.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இந்​நிலை​யில் நேற்று காலை கொடைக்​கானல் நகராட்சி மக்​களின் குடிநீர் ஆதா​ர​மாக இருக்​கும், வனப்​பகு​தி​யையொட்டி உள்ள மனோரஞ்​சிதம் அணை பகு​தி​யில் மூலிகை காற்றை சுவாசித்​த​படி, ஒரு மணி நேரம் முதல்​வர் ஸ்டா​லின் நடை​ப​யிற்சி மேற்​கொண்​டார்.

இதை அறிந்த பொது​மக்​கள், சுற்​றுலா பயணி​கள் அவரை பார்ப்​ப​தற்​காக அணை​யின் வெளிப் ​பகு​தி​யில் ஆர்வமுடன் காத்​திருந்​தனர்.

நடை​ப​யிற்​சியை முடித்​து​விட்டு வெளியே வந்த முதல்​வரை பார்த்​ததும் பலரும் ஆர்​வ​முடன் அவர் அருகே சென்று ‘செல்ஃபி’ எடுத்​துக்​கொண்​டனர். அப்​போது, பொது​மக்​களு​டன் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார். பின்​னர், தங்​கும் விடு​திக்கு சென்​றார்.

‘செல்ஃபி’ எடுத்த தாய்மார்கள்

இதற்​கிடையே, முதல்​வர் ஸ்டா​லினின் மனைவி துர்கா மற்​றும் குடும்​பத்​தினர் நட்​சத்​திர ஏரி​யில் 2 படகு​களில் சவாரி செய்​த​படி, இயற்கை காட்​சிகளை பார்த்து ரசித்​தனர்.

படகு சவாரியை முடித்​து​விட்டு வெளியே வந்த துர்கா ஸ்டா​லினிடம் குழந்​தையை கையில் கொடுத்து தாய்​மார்​கள் புகைப்​படம் எடுத்​துக் கொண்​டனர். பலர் ஆர்​வ​முடன் ‘செல்ஃபி’ எடுத்​துக் கொண்​டனர்.

பின்​னர், கொடைக்​கானலில் உள்ள பிரசித்தி பெற்ற மாரி​யம்​மன் கோயி​லில் துர்கா ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் சென்று அம்மனை தரிசனம் செய்​தார்.

SCROLL FOR NEXT