தமிழகம்

“நான் உங்க தேவா. நம்மோடு சிஎம் சார்...” முதல்வருடன் ரீல்ஸ் போட்ட தேவா - ஜீவா பிரதர்ஸ்!

வேட்டையன்

சென்னை: ‘நான் உங்க தேவா. நம்மோடு சிஎம் சார் இணைந்துள்ளார். அவர் சொல்லும் அட்வைஸை எல்லோரும் கேட்பீங்க. அதனால சிஎம் சார் நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்’ என முதல்வர் ஸ்டாலின் உடனான தங்களது சந்திப்பை அழகான கன்டென்டாக மாற்றியுள்ளனர் சிறுவர்களான தேவாவும், ஜீவாவும். இந்த சந்திப்பு முதல்வரின் அலுவலகத்தில் நடந்தது.

பரபரக்கும் அரசு மற்றும் தேர்தல் பணிகளுக்கு இடையே சற்று இளைப்பாறும் வகையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பிரபலங்களான சகோதரர்கள் தேவா, ஜீவாவை தன் அலுவலகத்தில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்பின் போது சிறுவர்களுடனான உரையாடலை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

          

அதில் அந்த சிறுவர்கள் குறித்தும், அவர்களின் குடும்பம் மற்றும் சமூக வலைதள வீடியோ குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். ‘உங்களை உற்சாகப்படுத்த நேரில் அழைத்தேன்’ என முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார். மேலும், அவர்களின் கனவு குறித்தும் கேட்டறிந்தார். அரசுப் பள்ளியில் படிக்கும் அவர்களிடம் பள்ளியின் செயல்பாடு, காலை சிற்றுண்டி மற்றும் சத்துணவு குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பங்கேற்றார். மேலும், சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவின் குடும்பத்தையும் சந்தித்தார்.

முதல்வர் உடன் இன்ஸ்டா ரீல்ஸ்: ‘நான் உங்க தேவா. நம்மோடு சிஎம் சார் இணைந்துள்ளார். அவர் சொல்லும் அட்வைஸை எல்லோரும் கேட்பீங்க. அதனால சிஎம் சார் நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்’ என தேவா வீடியோவில் இன்ட்ரோ கொடுக்க, “உங்களின் ரீல்ஸ் வீடியோ உருவாக்கம் நன்றாக உள்ளது. அதற்காக எனது வாழ்த்துகள். படிப்பில் கவனம் செலுத்தவும். நீங்கள் சொன்னது போல உங்கள் கனவுப் பணியான ஆட்சியர், காவல் அதிகாரியாக வாழ்த்துகிறேன். உங்கள் கனவு நிறைவேற் வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT