சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக, உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மின்வாரிய நிறுவனங்களின் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலர் மங்கத் ராம் சர்மா, இயக்குநர் ஜான் டால்டன் உடன் இருந்தனர்.

 
தமிழகம்

உடன்குடியில் 1,320 மெகாவாட் திறனுடன் ரூ.13,077 கோடியில் புதிய மின் திட்டம்

முதல் அலகில் மின்சார உற்பத்தியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் உடன்​குடி​யில் ரூ.13,077 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள அனல்​மின் நிலை​யத்​தில் மின் உற்​பத்​தியை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று காணொலி வாயி​லாக தொடங்கி வைத்​தார். இன்​னும் 2 அல்​லது 3 மாதங்​களில் 2-வது அலகும் மின் உற்​பத்​தியை தொடங்​கி, இரு அலகு​களும் முழு திறனில் செயல்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழ்​நாடு மின் உற்​பத்தி கழகம் சார்​பில், தூத்​துக்​குடி மாவட்​டம் உடன்​குடி​யில் ரூ.13,077 கோடி செல​வில் தலா 660 மெகா​வாட் மின் உற்​பத்தி திறனுடன் 2 அலகு​கள் கொண்ட மிக உய்ய (Super Critical) அனல்​மின் நிலை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான கட்​டு​மானப் பணி​கள் அனைத்​தும் முடிவடைந்​த நிலையில், கடந்த சில வாரங்​களாக முதல் அலகில் சோதனை ஓட்​டம் நடை​பெற்று வந்​தது. இந்த சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக அமைந்​து, மின் உற்​பத்தி சீராக இருந்​ததை தொடர்ந்​து, முதல் அலகின் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

          

முதல் அலகில் மின் உற்பத்தி: சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்து காணொலி வாயி​லாக, உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தின் முதல் அலகை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​து, மின் உற்​பத்​தியை தொடங்கி வைத்​தார். தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், மின்​வாரிய நிறு​வனங்​களின் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலர் மங்​கத் ராம் சர்​மா, இயக்​குநர் ஜான் டால்​டன் மற்​றும் உயர் அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

உடன்​குடி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்​நாடு மின் உற்​பத்​திக் கழக மேலாண்மை இயக்​குநர் எம்​.கோ​விந்த ராவ், மாவட்ட ஆட்​சி​யர் க.இளம்​பகவத், ஒட்​டப்​பி​டாரம் எம்​எல்ஏ சண்​முகையா ஆகியோர் கலந்​து​கொண்​டு, அனல்​மின் நிலை​யம் மற்​றும் நிலக்​கரி இறங்​குதளத்​தைப் பார்​வை​யிட்​டனர்.

உடன்​குடி அனல்​மின் நிலை​யம் மிக உய்ய அழுத்த கொதி​கலன் மற்​றும் அதிக செயல்​திறன் சுழலி​யுடன் (Supercritical Boiler with High Efficiency Turbine) நேர்த்​தி​யாக கட்​டப்​பட்​டுள்​ளது.

விரைவில் சோதனை ஓட்டம்: இந்த அனல்​மின் நிலை​யத்​தின் முதல் அலகில் மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ளதை தொடர்ந்​து, சில வாரங்​களில் 2-வது அலகில் சோதனை ஓட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. அனைத்து சோதனை​களும் முடிந்​து, இன்​னும் 2 அல்​லது 3 மாதங்​களில் 2-வது அலகும் மின் உற்​பத்​தியை தொடங்​கி, இரு அலகு​களும் முழு திறனில் செயல்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்த வளாகத்​தில் மேலும் 3 அலகு​கள் நிறு​வுவதற்கு விரை​வில் விரி​வாக்​கப் பணி​கள் தொடங்​கப்பட உள்​ளன. தற்​போது உள்ள 2 அலகு​கள் மற்​றும் இனி வரவுள்ள 3 அலகு​களுக்​கும் நிலக்​கரி கொண்​டுவர பிரத்​யேக கப்​பல் தளமும், மூடிய கன்​வேயர் அமைப்​பும் கட்​டப்​பட்​டுள்​ளன.

நடுக்கடலில் கப்பல் தளம்: ஒரே நேரத்​தில் 2 அதி​கொள்​ளளவு கப்​பல்​களைக் கையாளும் விதத்​தில், கரை​யில் இருந்து 9 கி.மீ தொலை​வில் நடுக்​கடலில் நிலக்​கரி கப்​பல் தளம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தளத்​தில் 2 அதிவேக நிலக்​கரி கையாளும் இயந்​திரங்​கள் உள்​ளன. சுற்​றுப்​புறச்​சூழலுக்கு எவ்​வித பாதிப்​புமின்றி கப்​பல் தளத்​தில் இருந்து 9 கி.மீ. மூடிய கன்​வேயர் பெல்ட் வழி​யாக அனல் மின் நிலை​யத்​துக்​கு, நிலக்​கரி கொண்டு வரப்​படு​கிறது.

அது​மட்​டுமின்​றி, சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​காக உடன்​குடி மின்​திட்ட வளாகத்​தில் 1.50 லட்​சம் மரக்​கன்​றுகள் நடும் திட்​டம் தொடங்​கப்​பட்​டு, இது​வரை 52 ஆயிரம் மரக்​கன்​றுகள் நடப்​பட்​டுள்​ளன. கூடு​தல் நிலக்​கரியை சேமிக்க 6.80 லட்​சம் டன் கொள்​ளளவு கொண்ட திறந்த மற்​றும் மூடிய நிலக்​கரி தளங்​கள் உள்​ளன. இந்த மின்​நிலை​யத்​தின் தேவை​களுக்​காக, கடல் நீரில் இருந்து நன்​னீர் உற்​பத்தி செய்​யும் இயந்​திரங்​கள் உள்​ளன. மின்​நிலை​யத்​தின் நன்​னீர் தேவை அனைத்​தும் கடல்​நீர் சுத்​தி​கரிப்​பான் வழி​யாகவே பெறப்​படு​கிறது.

இங்கு உற்​பத்தி ஆகும் சாம்​பலைச் சேகரித்​து, சிமென்ட் ஆலைகள் மற்​றும் செங்​கல் தயாரிப்​பாளர்​களுக்கு அளிக்க 4 சாம்​பல் குதிர்​கள் உள்​ளன. இங்​குள்ள ஆயிரக்​கணக்​கான உபகரணங்​களைக் கையாள உலகத் தரத்​தில் கட்​டுப்​பாட்டு மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. கோடை காலம் தொடங்​கி​யுள்ள நிலை​யில் தமிழகத்​தின் மின் தேவையை பூர்த்தி செய்​வ​தில் உடன்​குடி அனல்​மின்​ நிலை​யம்​ முக்​கிய பங்​காற்​றும்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT