பரமக்குடியில் நெசவாளர்களுடன் இணைந்து பாவு பிரிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 
தமிழகம்

“ஐபிஎல்-லில் நடந்தது தேர்தலிலும் நடக்க வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்

எஸ்.முஹம்மது ராஃபி

ஐபிஎல்-லில் நடந்தது சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடக்க வேண்டும். டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ருசிகரமாகப் பேசினார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்குடி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் முதுகுளத்​தூர், ராம​நாத​புரம், பரமக்​குடி, திரு​வா​டானை தொகு​தி​களில் போட்​டி​யிடும் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் மு.க. ஸ்டா​லின் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

          

அவர் பேசி​ய​தாவது: திறமை​யான நிர்​வாகத்​தால் நிதி நிலை​மையை மீட்​டெடுத்​திருக்​கிறோம். அதன் பயனாக நாட்​டிலேயே முதல் மாநில​மாக 11.01 சதவீத பொருளா​தார வளர்ச்​சியை கொண்டு வந்​திருக்​கிறோம்​.மகளிர் விடியல் பயணத்​துக்​கான பேருந்​துகளை விரை​வில் அமையப் போகிற திரா​விட மாடல் ஆட்​சி​யில் அதி​கரிக்​கப் போகிறோம். மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிர​மாக உயரப் போகிறது. புது​மைப் பெண் திட்​டத்​தில் ரூ. 1,500 ஆக உயரப் போகிறது. இல்​லத்​தரசிகளுக்கு ரு.8 ஆயிரம் கூப்​பன் வழங்​கப்பட உள்​ளது.

கச்​சத்​தீவை மீட்​கத் தொடர்ந்து மத்​திய அரசை வலி​யுறுத்​து​வோம். மத்​திய பாஜக அரசு தமிழகத்​தின் பிர​தி​நி​தித்​து​வத்​தைக் குறைக்​கப் பார்க்​கிறது. மக்​கள் தொகை​யைக் கட்​டுப்​படுத்தி நாட்​டின் வளர்ச்​சிக்கு துணை நின்ற தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநிலங்​களைத் தண்​டிக்​கப் பார்க்​கிறது.

உக்​ரைன் போரை நிறுத்தி விட்​டேன், அமெரிக்​காவை அலற விட்​டேன் என்று சொல்​லிக் கொண்​டிருக்​கும் விஸ்வகுரு பிரதமர் மோடி அண்டை நாடான இலங்​கை​யுடன் மீனவர் பிரச்​சினை குறித்து பேசச் சொன்​னால் மவுன குரு ஆகி விடு​கிறார். தமிழ்​நாட்டு மீனவர்​களை இந்​திய மீனவர்​களாக நினைத்​திருந்​தால் இப்​படி அல்​லல்பட விட்​டிருப்​பா​ரா?

சென்​னை​யில் ஓய்வு பெற்ற நீதி அரசர் அரிபரந்​தாமன் ஜீரோ பிஜேபி என்ற இயக்​கத்​தைத் தொடங்கி இருக்​கிறார். இதைத் தொடங்கி வைத்​தவர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் கணவர் பரகலா பிர​பாகர்.

அவர், ‘‘தமிழ்​நாட்டு தேர்​தல் நாட்​டுக்கே முக்​கிய​மான தேர்​தல். பாஜக​வுக்கு விழுகிற ஒவ்​வொரு வாக்​கும் இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் போற்​றிப் பாது​காக்​கும் உயர்ந்த விழு​மி​யங்​கள் மீது விழக்​கூடிய மரண அடி. மத நல்​லிணக்​கம், மொழி நல்​லிணக்​கம், மாநிலங்​களுக்கு இடையே​யான நல்​லிணத்​துக்​கான மரண அடி’’ என்று எச்​சரித்​திருக்​கிறார்.

மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் அறிக்​கையை வெளி​யிட்​டுள்ள பாஜக பொது சிவில் சட்​டத்​தைக் கொண்டு வரு​வேன் என்று சொல்​லி​யிருக்​கிறது. நம்​முடைய பன்​முகத் தன்​மைக்கு பாஜக விட்​டிருக்​கின்ற நேரடி சவால் இது. மேற்கு வங்​கத்​தில் விட்​டிருக்​கின்ற இந்த சவாலை தமிழ்​நாட்​டில் பாஜக​வால் விட முடிய​வில்​லை. ஏனென்​றால் தமிழ்​நாட்​டைப் பாது​காத்​துக் கொண்​டிருப்​பது திரா​விடப் பெருஞ்​சுவர். இதை பாஜக​வும் உணர்ந்​திருக்​கிறது.

பாஜக அமைச்​சர்​கள் தொடர்ந்து மும்​மொழிக் கொள்​கையை தமிழ்​நாடு ஏற்க வேண்​டும் என்று பேசுகிறார்​கள். இதை ஒரு நாளாவது பழனி​சாமி கண்​டித்​திருக்​கிறா​ரா? பொது சிவில் சட்​டம் குறித்து பழனி​சாமி​யின் நிலைப்​பாடு என்ன? அதி​முக​வுக்கு விழும் ஒவ்​வொரு வாக்​கும் பாஜக​வுக்​கும் விழுகின்ற வாக்​கு​கள். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தியது. அதைபோல சட்டமன்றத் தேர்தலிலும் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும். இவ்​வாறு ஸ்டா​லின் பேசி​னார்.

முன்​ன​தாக, நேற்று காலை மு.க. ஸ்டா​லின் பரமக்​குடி எமனேசுவரத்​தில் சாந்​தா​ராம் என்ற நெச​வாளர் வீட்​டிற்கு சென்​று, அங்கு நடை பெறும் நெசவுப் பணியை பார்​வை​யிட்​டார். முதல்​வர் தறி​யில் அமர்ந்து ஆர்​வ​முடன் நெசவு செய்து பார்த்​தார். பின்​னர், அதே பகு​தி​யில் பாவு பிரிக்​கும் நெச​வாளர்​களை சந்​தித்​து அவர்​களிடம்​ முதல்​வர்​ குறை​களைக்​ கேட்​டறிந்​தார்​. மேலும்​ பாவு பிரிக்​கும்​ பணியிலும்​ ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT