வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 
தமிழகம்

கே.வி.குப்பத்தில் ஸ்டாலின் நடைப் பயிற்சியின்போது பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கே.​வி.குப்​பம் (தனி) தொகு​தி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நடைப் பயிற்சி மேற்​கொண்​டு வாக்கு சேகரித்தார். கலைஞரின் கனவு இல்​லம் திட்​டம், அரசுப் பேருந்​தில் மகளிர் விடியல் பயணம் திட்​டம் குறித்து ஆய்வு மேற்​கொண்​டார்.

வேலூர் மாவட்​டத்​தில் உள்ள 5 தொகு​தி​களில் போட்​டி​யிடும் திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்று நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். இதற்​காக, வேலூருக்கு நேற்று முன்​தினம் இரவு ஸ்டா​லின் வந்​தார்.

தனி​யார் ஓட்​டலில் தங்​கி​யிருந்த அவர், கே.​வி.குப்​பம் பகு​தி​யில் நேற்று காலை நடைப் பயிற்சி மேற்​கொண்​டார். அப்​போது, தொகுதி வேட்​பாளர் டாக்​டர் ராஜேஸ்​வரி, கதிர் ஆனந்த் எம்​.பி. நந்​தகு​மார் எம்​.எல்​.ஏ. உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

          

கே.​வி.குப்​பம் பேருந்து நிலை​யம் மற்​றும் அரு​கில் உள்ள தெருக்​களில் நடந்து சென்ற முதல்​வர் திமுக வேட்​பாளர் டாக்​டர் ராஜேஸ்​வரிக்கு ஆதர​வாக வாக்கு சேகரித்​தார். தொடர்ந்​து, ஔவை நகரில் கலைஞரின் கனவு இல்​லம் திட்​டப் பயனாளி ஷீலா என்ற பெண்​ணின் வீட்​டிற்​குச் சென்று அவர்​களிடம் நலம் விசா​ரித்​தார். அவரிடம், மகளிர் உரிமத்​தொகை முறை​யாக வரு​கிற​தா? திமுக வழங்க இருக்​கும் ரூ.8000-க்​கான கூப்​பனில் எந்த பொருள் வாங்​கத் திட்​டம் வைத்​திருக்​கிறீர்​கள் என கேள்வி​களை முதல்​வர் உரை​யாடி​னார்.

பின்​னர், ஷீலா​வின் மகனிடம் ‘காலை உணவுத் திட்​டத்​தில் சாப்​பிடு​கிறீர்​களா? நன்​றாகப் படிக்க வேண்​டும். இதற்​காகத்​தான் காலை உணவு வழங்​கப்​படு​கிறது’ என கூறி​னார். கே.​வி.குப்​பம் பகு​தி​யில் உள்ள அம்​பேத்​கரின் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செய்​ததுடன், காவல் நிலை​யம் எதிரே​யுள்ள கடை​யில் ஸ்டா​லின் தேநீர் அருந்​தி​னார்.

அங்​கிருந்து கே.​வி.குப்​பம் பேருந்து நிலை​யம் சென்​றவர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த அரசு பேருந்​தில் மகளிர் விடியல் பயணம் குறித்து பெண்​களிடம் கேட்​டறிந்​தார். நடைப் பயிற்​சியை முடித்​துக்​கொண்டு வேலூர் திரும்​பும்​போது காட்​பாடி விருதம்​பட்டு பகு​தி​யில் உள்ள அம்​பேத்​கரின் முழு உரு​வச் சிலைக்கு விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யினரோடு சேர்ந்து மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

தமிழ்​நாட்டில் தொகுதி மறு சீரமைப்​பின்படி கே.வி.குப்பம் (தனி) தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்​கப்​பட்டது. 2011-ல் முதல் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி​யிட்ட செ.கு.தமி​ழரசன் வெற்றி பெற்றார். 2016-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் அதிமுக வேட்பாளர் லோகநாதன், 2021-ல் நடைபெற்ற மூன்றாவது தேர்தலில் அதிமுக சார்பில் பூவை எம்.ஜெகன்​மூர்த்தி போட்டி​யிட்டு வெற்றி​பெற்​றனர். இந்த தொகுதியை திமுகவால் இதுவரை வெல்ல முடிய​வில்லை.

எனவே, இந்த தேர்தலில் கே.வி.குப்பம் (தனி) தொகுதியை எப்படி​யாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பு திமுக​வினர் மத்தியில் உள்ளது. இந்த முறை திமுக வேட்பாளராக டாக்டர் ராஜேஸ்​வரியும் அதிமுகவில் மீண்டும் பூவை எம்.ஜெகன்​மூர்த்​தியும் போட்டி​யிடு​கின்​றனர். எனவே, கே.வி.குப்பம் (தனி) தொகுதியை திமுக வசமாக்கும் திட்டத்​துடன் கே.வி.குப்​பத்தில் நடைப்​ப​யிற்சி மூலம் முதல்வர் பிரச்​சாரம் மேற்கொண்​டதாக திமுக​வினர் கூறுகின்​ற​னர்.

இந்த ‘டிஸ்கஷன்’தான் ஓடுகிறது!- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கே.வி.குப்பம் தொகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.

அவரிடம் “அடுத்து, இல்லத்தரசி ரூ.8,000-க்கான கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என கேட்டேன். 2026 தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாகவே, இல்லத்தரசி ரூ.8,000 கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற திட்டங்கள் தொடங்கிவிட்டன. தமிழகம் முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த ‘டிஸ்கஷன்’தான் ஓடுகிறது. வீட்டுக்கு தேவையான எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அதேநேரம் அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் தேர்வாகவே இருக்கணும். அவர்கள்தான் இல்லத்து அரசிகள், குடும்பத் தலைவிகள். பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT