தமிழகம்

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வளை​குடா நாடு​களில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்​தில்​கொண்​டு, அங்​குள்ள தமிழர்​களின் அவசர உதவிக்​காக உதவி எண்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் நாடு​களுக்கு இடையே ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, ஈரான் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள ஐக்​கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபி​யா, கத்​தார் உள்​ளிட்ட வளை​குடாநாடு​களில் பதற்​ற​மான சூழ்​நிலை நில​வு​கிறது.

          

அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்பு கரு​தி, தேவையற்ற பயணங்​களைத் தவிர்க்​க​வும், இந்​திய தூதரகம் வழங்​கும் அறி​வுறுத்​தல்​களை முறை​யாக பின்​பற்றி வீடு​களி​லேயே பாது​காப்​பாக இருக்​கு​மாறும் இந்​திய அரசு கேட்டு கொண்​டுள்​ளது.

தமிழக முதல்​வர் என்ற முறை​யில், வளை​குடா நாடு​களில் வசித்து வரும் நம் தமிழர்​களின் பாது​காப்பு குறித்து மிகுந்த கவலை அடைந்​துள்​ளேன். அவர்​களின் நிலை​மையை உடனுக்​குடன் கண்​காணித்​து, அவர்​களுக்கு தேவை​யான உதவி​களை வழங்க அயலக தமிழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறைக்கு உரிய அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அங்​குள்ள தமிழர்​களுக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் வழங்க தமிழக அரசு தயார் நிலை​யில் உள்​ளது.

இதற்​காக டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தில் பிரத்​யேகக் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டு, நிலைமை தீவிர​மாக கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது.

பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் உள்ள தமிழர்​கள் அல்​லது தமிழகத்​தில் உள்ள அவர்​களது குடும்​பத்​தினர் ஏதேனும் அவசர உதவி தேவைப்​பட்​டால், தமிழக அரசின் 24 மணி நேர கட்​ட​ணமில்லா உதவி எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம்.

அதன்​படி, இந்​தி​யா​வுக்​குள் இருப்​பவர்​கள் 1800 309 3793 என்ற எண்​ணை​யும், வெளி​நாடு​களில் இருப்​பவர்​கள் +91 80 6900 9900 மற்​றும் +91 80 6900 9901 ஆகிய எண்​களை​யும் தொடர்பு கொள்​ளலாம். மேலும், டெல்லி கட்​டுப்​பாட்டு அறையை 011-24193300 மற்​றும் 92895 16712 (வாட்​ஸ்​-அப்) ஆகிய எண்​கள் மூலம் தொடர்பு கொள்ள வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT