தமிழகம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழகம் போராடி வெற்றி பெற்றுள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு எதி​ராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்​றது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

மக்​களவை​யில் நேற்று நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் தொகுதி மறு​வரையறை மசோதா தோல்​வியடைந்​தது. இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்​லியை வீழ்த்​தி​யது தமிழகம். டெல்​லி​யின் ஆணவத்​தை​யும், அதற்கு துணை போனவர்களையும் ஏப்​.23-ம்தேதி ஒருசேர வீழ்த்​து​வோம்.

தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு எதி​ராக தமிழகம் போராடியது, அதன் பலனாக வென்​றது. இந்​திய ஜனநாயகத்​தில் யாருக்கு பிர​தி​நி​தித்​து​வம் இருக்​கும், யாருடைய குரலுக்கு இடமிருக்​கும் என்​பது​தான் தொகுதி மறு​வரையறை. அது மத்​திய அரசை பலப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டுமே ஒழிய, பலவீனப்​படுத்​து​வ​தாக இருக்​கக் கூடாது.

பெரி​யார் -அண்ணா - கருணாநிதி காட்​டிய பாதை​யில், தமிழகம் எப்​போது நீதி, கண்​ணி​யம்,கூட்​டாட்சி ஆகிய​வற்​றுக்​காகவே நின்​றுள்​ளது. தென்​னிந்​தியா ஒன்​றிணைந்​தது; நமது குரல் கேட்​கப்​பட்​டது; ஜனநாயகம் வென்​றது. நாம் தொகுதி மறு​வரையறையை எதிர்க்​க​வில்​லை. நன்கு சிந்​தித்​து, அனை​வரை​யும் கலந்​தாலோ​சித்​து, அனை​வரும் ஏற்​று​கொண்ட, நியாய​மான நடை​முறையையே நாம் வலி​யுறுத்​தினோம்.

தமிழகத்​தின் உரிமை​களுக்​கும், நமது பண்​பாடு மற்​றும் அடை​யாளத்​துக்​கும், இந்​திய கூட்​டாட்​சிக்​கும் ஊறு வரும்​போது, ஒற்​றுமை​யுடன் நிற்​பது​தான் நமது உறு​தி. இந்த அநீ​தியை எதிர்த்து ஓரணி​யில் நின்ற அனைத்​துத் தோழமைக் கட்​சிகளுக்​கும் என்​னுடைய நன்​றி.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதனிடையே, மசோதா தோல்​வியடைந்​ததையடுத்து சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தலை​மை​யில் அக்​கட்​சி​யினர் இனிப்​பு​கள் வழங்​கி​யும், பட்​டாசுகள் வெடித்​தும் கொண்​டாடினர்.

SCROLL FOR NEXT