தமிழகம்

கிராமக் கோயில் பூசாரிகள் மறைந்தால் குடும்ப உதவித் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்வர் உறுதி

11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: கி​ராமக் கோயில் பூசா​ரி​களுக்கு ரூ.1,500 மாத ஊக்​கத் தொகை வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

பூசா​ரி​கள் மறைந்​தால் வாரிசுகளுக்கு வழங்​கப்​படும் குடும்ப உதவித் தொகை ரூ.50 ஆயிரத்​தில் இருந்து ரூ.1 லட்​ச​மாக உயர்த்​தப்​படும் என்​பது உட்பட 11 புதிய அறி​விப்​பு​களை​யும் அப்போது அவர் வெளி​யிட்​டார்.

          

இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் கிராமக் கோயில் பூசா​ரி​கள் மாநாடு சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு, கிராமக் கோயில் பூசா​ரி​கள் 6 ஆயிரம் பேருக்கு மாதாந்​திர ஊக்​கத் தொகை​யாக ரூ.1,500 வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​தார். அதன் அடை​யாள​மாக 11 பூசா​ரி​களுக்கு காசோலைகளை வழங்​கி​னார்.

பூசா​ரி​கள் 10 பேருக்கு பூஜை உபகரணங்​கள், 2 பேருக்கு இருசக்கர வாக​னம் வாங்​கு​வதற்​கான மானி​யம் தலா ரூ.12 ஆயிரத்​துக்​கான காசோலை, 3 பேரின் பிள்​ளை​களுக்கு கல்வி உதவித்​தொகை, ஒரு பூசா​ரி​யின் வாரிசுக்கு குடும்ப நலநிதி ஆகிய​வற்​றை​யும் வழங்​கி​னார்.

பின்னர் முதல்​வர் பேசி​ய​தாவது: உண்​மை​யான ஆன்​மிக அன்​பர்​களும், இறைப் பற்​றாளர்​களும் விரும்​பக்​கூடிய அரசாக இந்த திரா​விட மாடல் அரசு உள்​ளது. இந்த மாநாடுபலருக்கு வியப்​பாகவும் சிலருக்கு எரிச்​சல்​கூட வரலாம். இந்த மண்​ணில் வாழும் பெரும்​பான்​மை​யான மக்​களின் உரிமை​களை நிலைநிறுத்​திய திரா​விட இயக்​க உணர்​வை, இந்த அரசில்​தான் நிலை​நாட்டியுள்​ளோம்.

தமிழக வரலாற்​றில் இல்​லாத அளவுக்​கு, இந்த அரசு பொறுப்​பேற்ற 1,759 நாட்​களில், 4,335 கோயில்​களில் திருப்​பணி​கள் மேற்​கொண்டு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது. கோயில் சொத்​துகளை மீட்க வேண்​டும் என பெரு​முயற்சி எடுத்​து, அதி​லும் சாதனை படைத்​துள்​ளோம். ரூ.8,440 கோடி மதிப்​பிலான 8,140 ஏக்​கர் நிலங்​களை மீட்​டுள்​ளோம்.

இந்த நிலை​யில், கிராமக் கோயில் பூசா​ரி​களின் நலனுக்​கான 11 புதிய அறி​விப்​பு​களை தற்​போது வெளி​யிடு​கிறேன். பொங்​கல் திரு​நாளுக்கு அனைத்து உறுப்​பினர்​களுக்​கும் புத்​தாடை வழங்​கப்​படும். உறுப்​பினர் மறைந்​தால் வாரிசுகளுக்கு வழங்​கப்​படும் தொகை ரூ.50 ஆயிரத்​தில் இருந்து ரூ.1 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். கிராமக் கோயில் பூசா​ரி​களுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆண்டுவரு​மான உச்​சவரம்பு ஆண்​டுக்கு ரூ.1.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். கால​மான உறுப்​பினரின் இறு​திச் சடங்​குக்​காக வழங்​கப்​படும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை ரூ.10 ஆயிர​மாக உயர்த்​தப்​படும்.

ஆண்​டு​தோறும் 500 பூசா​ரி​களுக்​கு, தேர்ந்த பயிற்​றுநர்​களைக் கொண்டு புத்​தொளிப் பயிற்சி நடத்​தப்​படும். பூசா​ரிக்கு ரூ.3 ஆயிரம், மகனுக்கு ரூ.3 ஆயிரம், மகளுக்கு ரூ.5 ஆயிரம் என வழங்​கப்​படும் திருமண நிதி​யுதவி ரூ.1,000 உயர்த்​தப்​படும். பூசா​ரி​யின் மகன், மகளுக்​கானகல்வி நிதி​யுத​வி, ரூ.2 ஆயிரம் மற்​றும் ரூ.2,500 ஆக உயர்த்​தப்​படும். இளநிலை, முது​நிலை பட்​டப் படிப்​புக்​கான நிதி​யுதவி ஆண்​டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்​தப்​படும்.

தொழில்​சார்ந்த இளநிலை, முது​நிலை பட்​டப்படிப்பு நிதி ஆண்​டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்​தப்​படும். தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தில் பயில ஆண்​டுக்கு ரூ.1,000 உயர்த்​தப்​படும். உறுப்​பினர்​களுக்கு மூக்​குக் கண்​ணாடி வாங்க வழங்​கப்​படும் ரூ.500 நிதியானது ரூ.1,000 ஆக உயர்த்​தப்​படும்.

சமரச​மும், சமத்​து​வ​மும்​தான் ஆன்​மிகப் பாதை​யாக இருக்க முடி​யும். தமிழகத்​தில் மட்​டுமின்​றி, நாடு முழு​வதும் இத்​தகைய சமத்​து​வம், சகோ​தரத்​து​வம் நிலைபெற வேண்​டும். மக்​களுக்​குள் ஒற்​றுமை ஓங்கி வளர வேண்​டும். மக்​களைப் பிரிக்க நினைக்​கும் கும்​பல்​களை அடை​யாளம் கண்டு புறக்​கணிக்க வேண்​டும். உங்​கள் ஆதர​வோடு திரா​விட மாடல் ஆட்சி தொடர வேண்டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த மாநாட்​டில் இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு, குன்​றக்​குடி ஆதீனம் பொன்​னம்பல அடிகளார், மயிலம் பொம்​மபுர ஆதீனம் சிவ​ஞான​பாலய சுவாமிகள், ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் ராமானுஜ எம்​பார் சுவாமிகள், சென்னை மேயர் பிரி​யா, அறநிலை​யத் துறை செயலர் க.மணி​வாசன், துறை ஆணை​யர் பி.என்​.ஸ்ரீதர், கூடு​தல் ஆணை​யர்​கள் துரை.ர​விச்​சந்​திரன், மா.க​வி​தா, அறநிலை​யத் துறை ஆலோ​சனைக் குழு உறுப்​பினர் ராம சுப்​பிரமணி​யன், கிராமக் கோயில் பூசா​ரி​கள் பேரவை அறங்​காவலர் ஆர்​.ஆர்​.கோ​பால்​ஜி, கிராமக்​ கோயில்​ பூசா​ரி​கள்​ சங்​கத்​ தலை​வர்​ வாசு மற்​றும்​ அரசு உயர்​ அதி​காரிகள்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT