கோப்புப் படம் 

 
தமிழகம்

தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுச்சேரி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்க: விஜய்க்கு ரங்கசாமி கடிதம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பிறகும், எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கும் பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசியது: “புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி பெற அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கலால் துறையில் மாற்றங்கள் கொண்டுவந்து வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பரிந்துரைப்படி வரியை உயர்த்தாமல் நிதியை அதிகரிக்க எம்எல்ஏக்கள் நியாயமான கோரிக்கைகளை வைக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.

புதுச்சேரியில் சிறு, குறு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மத்திய அரசு உத்தரவால் பெரு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய இயலவில்லை. புதுவை அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுவை, காரைக்கால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஆறு மாத நிலுவை சம்பளம். விரைவில் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT