தமிழகம்

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் இறுதி ஊர்வலங்களை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டம் கொண்டு வரு​வது குறித்து தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது.

மதுரை​யில் கடந்த ஆண்டு மார்ச் 5-ல் கல்​லூரி மாணவி​கள் 25 பேர் பயணம் செய்த கல்​லூரிப்பேருந்து ஆலங்​குளம் அருகே சென்​ற​போது, இறுதி ஊர்​வலத்​தில் சென்றவர்​கள் போதை​யில் பேருந்தை நிறுத்தி மாணவி​களை ஆபாச​மாகப் பேசி, ஓட்​டுநரையும் தாக்​கி பேருந்​தை​ சேதப்​படுத்​தினர்.

இதுதொடர்​பான புகாரின் பேரில் பெருங்​குடி போலீஸார் சங்​கர், அஜித்​கு​மார், சந்​திர​போஸ் உள்பட பலர் மீது வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் முன்​ஜாமீன் கோரி மூவரும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் பிறப்​பித்த உத்​தர​வு: மது போதை​யில் இருந்​தவர்​களின் செயலை சாதா​ரண​மாகக்கருத முடி​யாது. இறுதி ஊர்​வலங்​களில் பங்​கேற்​பது ஒரு சமூக மற்​றும் கலாச்​சார நடை​முறை​யாக இருந்​தா​லும், அது பொது பாதுகாப்​புக்கு ஆபத்தை விளைவிக்​கவோ, வன்​முறை அல்​லது ஒழுங்​கீனச் செயல்​களில் ஈடு​படவோ காரண​மாக இருக்​கக்கூடாது.

மனு​தா​ரர்​களை காவலில் எடுத்து விசா​ரிக்க வேண்​டும். முன்​ஜாமீன் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன. கடலூரில் இறுதி ஊர்​வலத்​தில் சென்​றவர்​கள் வீசிய மாலை​யால் பொறி​யாளர் ஒருவர் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்தது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்து பல உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது.

இதையடுத்து இறுதி ஊர்​வலங்​களுக்கு கட்​டுப்​பாடு விதித்து டிஜிபி சுற்​றறிக்கை அனுப்​பி​னார். இருப்​பினும் இறுதி ஊர்​வலங்​களின் போது ஒழுங்​கீன​ செயல்​கள் தொடர்கின்​றன.

இதை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டத்தை இயற்​று​வது குறித்து ஆராய தலை​மைச் செயலருக்கு உத்​தர​விடப்​படு​கிறது. இது தொடர்​பாக ஜூலை 31-க்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். வி​சா​ரணை ஜூலை 31-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT