தமிழகம்

சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

தமிழினி

சென்னை: சென்னை செங்குன்றம் அருகே புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் விஜய் பதவியேற்றது முதல், அவ்வப்போது பல்வேறு அரசு கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, சென்னை செங்குன்றம் அருகே புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, M3 காவல் நிலையத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்.

இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை, வசதிகள் தொடர்பாக நேரில் சென்று முதல்வர் திடீர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடம், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்வர் நேரில் ஆய்வு நடத்தினார்.

முன்னதாக, மெட்ரோ, திருவள்ளூர் சிப்காட், பெரம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT