தமிழகம்

தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் ‘ரோட் ஷோ’ - தவெகவினர் உற்சாகம்

வெற்றி மயிலோன்

தாராபுரம்: ​திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் இடைத்​தேர்தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் சத்ய​பா​மாவை ஆதரித்​து, தமிழக முதல்வர் விஜய் தாராபுரத்​தில் ‘ரோட் ஷோ’ தொடங்கி நடத்தி வருகிறார்.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு ரோட் ஷோ மேற்கொள்வதற்​காக, கோவை விமான நிலை​யத்​தில் இருந்து ஹெலி​காப்​டர் மூலம் தாராபுரம் வந்த முதல்வர் விஜய், தாராபுரம் - உடுமலை சாலை​யில் உள்ள மாருதி நகர் பகு​தி​யில் அமைக்கப்பட்​டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்​கினார். அங்கு முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

ஹெலிபேடில் இறங்கி பிரச்சார வாகனத்துக்கு மாறிய முதல்வர் விஜய், அங்கிருந்தே தவெக வேட்பாளர் சத்யபாமாவுடன் ‘ரோட் ஷோ’ மேற்கொண்டு வருகிறார். முதல்வர் விஜய்க்கு வரவேற்பளிக்க வழிநெடுகிலும் தவெகவினர் மற்றும் மக்கள் ஆரவாரத்துடன் நின்றபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் விஜய்யின் பிரச்சாரத் திட்டம்:

தாராபுரம் - உடுமலை சாலை​யில் உள்ள ஹெலிபேடில் இருந்து மூலனூர் வரை சுமார் 30 கிலோ மீட்​டர் தொலைவுக்கு திறந்த வாக​னத்​தில் ‘ரோடு ஷோ’ சென்று வாக்கு சேகரிக்​கிறார். முதல்வரின் வரு​கை​யையொட்டி தாராபுரம் பகு​தி​யில் திருப்​பூர் மாவட்ட காவல்கண்​காணிப்​பாளர் சிருஷ்டிசிங் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. செப்.30-ம் தேதி நடை​பெற்ற தேர்தல் பொதுக்​கூட்டத்தில் பேசிய முதல்​வர் விஜய், இன்று 2-வது முறை​யாக தா​ராபுரத்​துக்​கு வந்துள்ளார்.

முன்​ன​தாக, சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் புறப்​பட்டு கோவைக்குக் காலை 9.10 மணிக்கு விஜய் வரு​கை தந்தார். அதைத் தொடர்ந்து ஹெலி​காப்​டர் மூல​மாக தாராபுரம் வந்தார். பிரச்​சா​ரம் முடிந்து மாலை​யில் மீண்​டும் ஹெலி​காப்​டர் மூலம் கோவை வந்​து, விமானத்​தில் சென்னை புறப்​பட்​டுச் செல்​கிறார்.

SCROLL FOR NEXT