தமிழகம்

பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: பண்​டிதர் அயோத்​தி​தாசரின் 181-வது பிறந்த நாளை முன்​னிட்டு கிண்​டி, காந்திமண்டப வளாகத்​தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்​வர் விஜய் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

மேலும் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, விசிக தலை​வர் திரு​மாவளவன் ஆகியோ​ரும் அவரது சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

முதல்​வர் விஜய் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில், “பண்​டிதர் அயோத்​தி​தாசர் ஏற்​றத்​தாழ்வு மிக்க சமூகங்​களைக் கண்டு வெகுண்​டெழுந்து சமூக சீர்​திருத்​தப் பாதை​யில் தனது பயணத்தை தொடங்கி சாதி ஒழிப்​பை​யும், சமூக விடு​தலை​யை​யும் தனது லட்​சி​ய​மாகக் கொண்​டிருந்​தார்.

சித்த மருத்​து​வம் பயின்​று, சிறந்த சித்த மருத்​து​வ​ராக விளங்​கி​னார். 1892-ல் நீல​கிரி மாநாட்​டுத் தீர்​மானத்​திலேயே அயோத்​தி​தாசர் இட ஒதுக்​கீடு கோரிக்​கையை முன்​வைத்​தார்.

கைம்​பெண் மறுமணம், பெண்​களுக்கு தொழிற்​கல்​வி​யில் இட ஒதுக்​கீடு, சம உரிமை ஆகிய​வற்றை கோரிய காரணத்​தால் தென்​னிந்​தி​யா​வின் சமூக சீர்​திருத்​தங்​களின் தந்தை என்று அழைக்​கப்​பட்​டார்” என கூறி​யுள்​ளார்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: சாதி​யெனும் இருள் அகற்​றிடத் தோன்​றிய திரா​விடப் பேரொளி அயோத்​தி​தாசரின் புகழ் ஓங்​குக. மயங்​கிக் கிடந்த நம் இனம் விழித்​தெழ, புரட்​சிகரச் சிந்​தனை​களை விதைத்த திரா​விட இயக்​கத்​தின் முன்​னோடி பண்​டிதர் அயோத்​தி​தாசர்.

அவருக்​கு உரு​வச் சிலை​யும் மணிமண்​டப​மும் அமைத்​தது, அவரது பெயரில் குடி​யிருப்பு மேம்​பாட்​டுத் திட்​டம் உரு​வாக்​கியது திமுக அரசுக்​குக் கிடைத்த பெரும் பெரு​மை.

சாதிபேதமற்ற சமு​தா​யத்​தைக் கட்​டமைக்க, ‘தமிழன்’, ‘தி​ரா​விடன்’ ஆகிய சொற்​களை அரசி​யல்​களத்​தில் ஆயுத​மாகப் பயன்​படுத்​திய அயோத்​தி​தாசரின் சிந்​தனை​கள் நீடூழி வாழ வேண்​டும்.

திரா​விடச் சிந்​தனை நோக்கி இளைஞர்​களை ஈர்த்த அவரது வழி​யில் பயணிப்​போம்! தமிழ்ச் சமூகம் மேன்​மை​யுற தொடர்ந்து பாடு​படு​வோம் என்று தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT