சென்னை: மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது .... அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மற்றும் இந்து அமைப்புகள் மீது திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது .... அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் - இவைதான் மதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.