தமிழகம்

‘எனது வெற்றிக்குப் பின்னால் மனைவி இருக்கிறார்’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட ஜம்​புலிங்​கம் சாலை​யில் மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடியில் கட்​டப்​பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளி​கையை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று முன்தினம் திறந்து வைத்​து, அங்கு 15 ஜோடிகளுக்கு திரு​மணத்தை நடத்தி வைத்​தார்.

மேலும், ரூ.17.47 கோடி​யில் ஜிகேஎம் குடி​யிருப்பு அரசு மாதிரி மேல்​நிலைப் பள்ளி கட்​டிடம், பெரி​யார் நகர் அமுதம் அங்​காடி கட்​டிடப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். திருமண விழா​வில் முதல்​வர் ஸ்டாலின் பேசி​ய​தாவது: ஒரு ஆணின் வெற்​றிக்​குப் பின்​னால் பெண்​தான் இருக்​கிறார் என்​ப​தற்கு பல உதா​ரணங்​கள் உண்​டு. எனது வெற்​றிக்​குப் பின்​னாலும் என்​னுடைய மனை​வி​தான் இருக்​கிறார்.

ஓராண்டு காலம் நான் மிசா​வில் இருந்​த​போது, அவர் கோபித்​துக்​கொண்டு ஏதாவது முடிவு எடுத்​திருந்​தால் என் நிலைமை என்ன ஆகி​யிருக்​கும். பொறுமை​யாக இருந்​து, எவ்​வளவோ கொடுமை​கள் எனக்கு வந்த நேரத்தில், என்னை ஊக்கப்படுத்தி, உற்​சாகப்​படுத்​தி​ய​தால்​தான் இன்று இந்த நிலை​மைக்கு வந்​திருக்​கிறேன். அது​போல​த்தான் ஒவ்​வொரு​வரும். எனவே, மனைவி சொன்​னால், கேட்​டுக் கொள்ள வேண்​டும்.

அளவோடு பெற்று வளமோடு வாழுங்​கள். கி.ஆ.பெ.​விசுவ​நாதம் கூறியது​போல, மாடு, மனை, மனை​வி, மக்​கள், கல்​வி, கேள்​வி, அறி​வு, ஒழுக்​கம், நிலம், நீர், வயது, வாக​னம், பொன், பொருள், போகம், புகழ் ஆகிய பதி​னாறும் பெற்று மணமக்​கள் சிறப்​போடு வாழ​வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

‘எதிரிக்​கட்​சித் தலை​வர்’ - நிகழ்​வின் முடி​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், “100 நாள் வேலை திட்ட விவ​காரத்​தில் போராட்​டம் நடத்த திமுக திட்​ட​மிட்​டுள்​ளது. எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி வழக்​கம்​போல இந்த விவ​காரத்​தி​லும் மாறு​பட்ட கருத்​துகளைத்​தான் தெரி​வித்​துள்​ளார். மடிக்​கணினி விஷ​யத்​தில் அவர் எதிரிக்​கட்​சித் தலை​வ​ராகவே செயல்​படு​கிறார்” என்று தெரிவித்​​தார்​.

SCROLL FOR NEXT