சென்னை: சுகாதாரம், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை சார்பில் ரூ.542.05 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (பிப்.16) நடைபெற்ற நிகழ்வில் சுகாதாரத் துறை சார்பில், ரூ.100 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டிடம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூ.64.09 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடம், ராயபுரம், அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத் துவமனையில் ரூ.31.74 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்துக்கான கூடுதல் கட்டி டம் மற்றும் ரத்த வங்கி, நவீன ரத்தக் கூறு பிரிப்பு அலகு ஆகியவற்றையும் திறந்துவைத்தார்.
இதுதவிர, திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டிடம், வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.13.40 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் என ரூ.317.73 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்தார்.
குறு, சிறு தொழில்கள் துறை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில், சென்னை, கிண்டி தொழிற் பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்துக்காக (டான்சி) ரூ.175 கோடி செலவில் 263 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளா கத்தை திறந்து வைத்தார்.
மேலும், ரூ.32.33 கோடியில் சேலம் - நெய்காரப்பட்டியில் பட்டு நூல் குழுமம், விருதுநகர் ராஜபாளையத்தில் மகளிருக்கான நெசவுக் குழுமம், தேனி – திம்மிநாயக்கன்பட்டியில் செயற்கைப் பட்டுக் குழுமம், சென்னை – பூங்கா நகர் மற்றும் திருநெல்வேலி – மீனாட்சிபுரத்தில் தங்க நகைக் குழுமங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.
இதுதவிர, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் மூலம் ரூ.16.99 கோடி செலவில் கோயம்புத் தூர் – பொள்ளாச்சியில் கயிறு குழுமம், வேலூர் - பென் னாத்தூரில் தேன் பதப்படுத்துதல் குழுமம் மற்றும் கரூர் - புக ளூரில் கயிறு குழுமம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து, சிட்கோ நிறுவனத்தின் லாபத்தில், அரசின் ஈவுத் தொகையான ரூ.7 கோடியே 30 லட்சத்து 59 ஆயி ரத்து 300-க் கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பர சன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.