கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

 
தமிழகம்

நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை நிறுத்த உத்தரவிடுவதா? - மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழக விவ​சா​யிகளுக்கு நெல்​லுக்​கான ஊக்​கத் தொகையை நிறுத்த கோரி மத்​திய அரசு கடிதம் எழு​தி​யுள்​ள​தாக​வும், ஆனால் எந்த உத்​தரவு வந்​தா​லும் அதையெல்​லாம் மீறி, மீண்​டும் திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் விவ​சா​யிகளுக்​கான ஊக்​கத் தொகை தொடர்ந்து வழங்​கப்​படும் எனவும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உறு​திபட தெரி​வித்​தார்.

தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் உள்ள 8 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் போட்​டி​யிடும் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து தஞ்​சாவூரில் நேற்று மாலை நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​யது: மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், நெல்​லுக்கு ஊக்​கத்​தொகை வழங்​கக் கூடாது என அறி​வுறுத்தி உள்ளது.

          

ஆனால், எந்த உத்​தரவு வந்​தா​லும் அதையெல்​லாம் மீறி, மீண்​டும் திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் விவ​சா​யிகளுக்​கான ஊக்​கத் தொகை தொடர்ந்து வழங்​கப்​படும். அதே​போல, 4 ஆண்​டு​களாக முதல்​வ​ராக இருந்த பழனி​சாமி ஆட்​சி​யில், மாநில அரசு வழங்​கும் நெல்லுக்கான ஊக்​கத்​தொகை​யாக ஒரு ரூபாய் கூட உயர்த்​தித் தரவில்​லை.

கடந்த 5 ஆண்​டு​களில் ஊக்​கத்​தொகை​யாக மட்​டும் ரூ.2,500 கோடி நிதி விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, இந்த தேர்​தல் அறிக்​கை​யில் சொல்​லி​யிருப்​பது போலவே அடுத்து திமுக ஆட்​சிக்கு வந்​ததும் குவிண்​டாலுக்கு ரூ.3,500 வழங்​கப்​படும்.

தேர்​தலில் தோல்வி பயத்​தில் ஏற்​கெனவே வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிரத் திருத்​தம் என தெரி​வித்​து, இந்​தியா முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​களு​டைய வாக்​குரிமையை பறித்​தனர்.

தற்​போது தமிழகத்​தில் தலை​மைச் செய​லா​ளர் உள்​ளிட்ட பல்​வேறு அதி​காரி​களை மாற்​றி, தங்​களுக்கு சாதக​மான அதி​காரி​களை நியமித்து தேர்​தலில் தில்​லு​முல்லு செய்ய பார்க்​கிறார்​கள்.

கடந்த முறை ஸ்டா​லினுக்கு முதல்​வ​ராகும் யோகம் இல்​லை, கட்​டம் சரி​யில்லை என்று தெரி​வித்​தனர். அதை உடைத்து முதல்​வர் ஆனேன்.

இப்​போது திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்​காது என்​கின்​றனர். கடந்த முறையை போல, இந்த முறை​யும் உடைத்து மீண்​டும் முதல்​வர் ஆவேன்.

நாம் போ​ராடு​வது ஒரு கட்​சி​யோட வெற்​றிக்​காக அல்ல. ஒட்​டுமொத்த தமிழகத்​தின் வெற்​றிக்​காக என்​பதை உணர்ந்​து தி​முக கூட்​ட​ணி வேட்​பாளர்​களுக்​கு வாக்​களிக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT