சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வரவேற்ற குழந்தைகள்.

 
தமிழகம்

சிறுபான்மை மக்களுக்கு திமுக துணையாக இருக்கும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுகவும், மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யும் உறு​தி​யாக இருக்​கும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திமுக சென்னை கிழக்கு மாவட்ட சிறு​பான்​மை​யினர் நல உரிமை பிரிவு சார்​பில் கிறிஸ்​து​மஸ் விழா சென்னை பெரம்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், 3,250 குடும்​பங்​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கி​னார். தொடர்ந்து அவர் பேசி​ய​தாவது: அனை​வருக்​கும் கிறிஸ்​து​மஸ் வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன். சிறு​பான்​மை​யின மாணவர்​களுக்​காக 14 கல்​லூரி விடு​தி​களில் நூல​கம், உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு கருவி​கள் போன்ற கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தி​யுள்​ளோம்.

வெளி​நாடு​களில் உயர்​கல்வி பயில சிறப்​பான திட்​டம், 456 சிறு​பான்​மை​யின கல்வி நிறு​வனங்​களுக்கு நிரந்தர அந்​தஸ்​து, ஜெருசலே​முக்கு புனிதப் பயணம் செய்​வதற்​கான மானி​யம் உயர்​வு, ரூ.2.87 கோடி​யில் 44 தேவால​யங்​கள் புனரமைப்பு உட்பட பல்​வேறு திட்​டங்​களை திமுக அரசு செயல்​படுத்​தி​ உள்ளது.

அதே​போல், 2019 முதல் 2024 வரை செயல்​பட்​டு​வரும் தமிழ்​நாடு ஒருங்​கிணைந்த வளர்ச்சி மற்​றும் கட்​டிட விதி​முறை​கள் 2019-ன்​படி உள்ள மதச்​சார்​பான கட்​டிடங்​களுக்கு மாவட்ட ஆட்​சி​யரின் முன்​அனு​ம​தியை வலி​யுறுத்​தாமல் இனி திட்ட அனு​மதி வழங்​கப்​படும்.

இந்த காலத்​தில் திட்ட அனு​மதி வேண்டி விண்​ணப்​பித்​துள்ள மதச்​சார்​பான கட்​டிடங்​களுக்​கும் இது பொருந்​தும் என்ற அறி​விப்பை தற்​போது வெளி​யிடு​கிறேன்.

இன்​றைக்கு சிறு​பான்​மை​யின மக்​கள் எத்​தகைய அச்ச உணர்​வோடு வாழ்​கிறார்​கள் என்று நான் சொல்லி தெரிய​வேண்​டிய அவசி​யமில்​லை. இந்த நாட்​டின் குடிமக்​களுக்கே அச்​சத்தை வரவைக்​கும் சர்​வ​தி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறனும், உணர்​வும் திமுக​வுக்​கு​தான் உள்​ளது.

உங்​களுக்கு துணை​யாக திமுக​வும், மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யும் உறு​தி​யாக இருக்​கும். அதே​போல், என்​றைக்​கும் நீங்​கள் எங்​களுக்கு துணை​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

SCROLL FOR NEXT