தமிழகம்

நீதிபதிகளின் அர்ப்பணிப்பும் வழக்கறிஞர் திறனும் இணைந்தால் மக்களுக்கு சரியான நீதியை வழங்க முடியும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

கி.மகாராஜன்

மதுரை: நீ​திப​தி​களின் அர்ப்​பணிப்​பும், வழக்கறிஞர்​களின் தொழில் திறனும் இணைந்​தால் சரியான நீதி வழங்க முடி​யும் என உச்ச நீதிமன்ற லைமை நீதிபதி சூர்​ய​காந்த் பேசி​னார்.

மதுரை மாவட்ட நீதி​மன்ற வளாகத்​தில் ரூ.166 கோடி​யில் 3 மாடி கூடு​தல் நீதி​மன்ற கட்​டிடம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்ள கூடு​தல் விருந்​தினர் மாளி ​கை​யின் திறப்பு விழா மாவட்ட நீதி​மன்ற வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.எம்​.தர்​மா​தி​காரி தலைமை வகித்​தார். நீதிபதி ஆர்​.சுரேஷ்கு​மார் வரவேற்றார். கட்​டிடங்​களை திறந்து வைத்து தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் பேசி​ய​தாவது: உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிப​தி​கள், வழக்​கறிஞர்​கள் அனை​வரும் தொழில் நெறி​முறை​களைக் கடைப்​பிடித்​துச் சிறப்​பாகப் பணிபுரி​கின்​றனர்.

சமீப காலங்​களில் சென்னை உயர் நீதி​மன்​றம், குறிப்​பாக மதுரை அமர்வு குற்​ற​வியல், உரிமை​யியல் மற்​றும் அரசி​யல மைப்​புச் சட்ட வழக்​கு​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்கி முன்​னணி​யில் உள்​ளது.

நீதிப​தி​களின் அர்ப்​பணிப்​பும், வழக்​கறிஞர்​களின் தொழில் திறனும் இணைந்​தால் சரியான நீதி வழங்க முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார். உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜெ.கே.மகேஸ்​வரி, எம்​.எம்​.சுந்​தரேஷ், ஆர்​.ம​காதேவன் உள்ளிட்டோர் உரை​யாற்​றினர்.

உயர்நீதி​மன்ற நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், தனபாலன், மாவட்ட முதன்மை நீதிபதி சிவக​டாட்​சம், தலை​மை குற்​ற​வி யல்நீதித்​துறை நடு​வர் செல்​ பாண்​டி, வழக்​கறிஞர்​கள் சங்​கத் நிர்வாகிகள் பங்​கேற்​றனர். நீதிபதி வேல்​முரு​கன் நன்றி கூறி​னார்.

SCROLL FOR NEXT