சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில், மீஞ்சூர்- பொன்னேரி இடையே ரயில்வே பொறியியில் பணி நடக்க உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டிக்குபிப்.9,11,13, 14 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர்- கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரலுக்கு பிப்.10, 12, 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி- மீஞ்சூர் இடையேயும் பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், மைலம்- திண்டிவனம் இடையே ரயில்வே பொறியியல் பணி காரணமாக, தாம்பரம்- விழுப்புரத்துக்கு இடையே பிப்.10, 12, 14 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்படும் மெமு ரயில், திண்டிவனம்- விழுப்புரம் இடையேயும், விழுப்புரம்- கடற்கரை இடையே பிப்.10, 12, 14 ஆகிய தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய மெமூ ரயில், விழுப்புரம்- திண்டிவனம் இடையேயும் பகுதி ரத்து செய்யப்படுகிறது.