தமிழகம்

தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​யில் வர்த்தகம் செய்​வதற்​கு, பரிந்​துரைக்​கப்​பட்ட கட்​ட​ணத்தை செலுத்தி வணி​கர்​கள், மாநக​ராட்​சி​யிடம் இருந்து தொழில் உரிமம் பெற்​றிருக்க வேண்​டும்.

அந்த உரிமத்தை உரிமைக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்பே தவறாமல் புதுப்​பித்​துக் கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது.

https://chennaicorporation.gov.in/gcc/online-services/trade-licence என்ற இணை​யதளத்​தில் தொழில் உரிமத்தை உரிய கட்​ட​ணம் செலுத்தி புதுப்​பித்​துக்​கொள்​ளலாம்.

அதே​போல் சம்​பந்​தப்​பட்ட மண்டல அலு​வல​கம் மூல​மாக​வும், அனைத்து இ-சேவை மையங்​கள் மூல​மாக​வும் புதுப்​பித்​துக்​கொள்​ள​ வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. உரிமம் புதுப்​பித்​தலுக்கு நிலு​வை​யின்றி தொழில்வரி செலுத்​தப்​பட்​டிருக்க வேண்​டும்.

ஏற்​கெனவே பெறப்​பட்ட தொழில் உரிமத்​தின் நகல், தொழில் உரிமக் கட்​ட​ணம் ஆகிய​வற்​றின் ஆவணங்​கள் போது​மானது. கூடு​தல் விவரங்​களுக்கு 044-25619305 என்ற தொலைபேசி எண்​ணை​யும், ro@chennaicorporation.gov.in மற்​றும் arohqpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT