சென்னை: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அரக்கோணம் - திருத்தணிக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதிகாலை 4, 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி - அரக்கோணத்துக்கு இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 5 ரயில்கள் ரத்து செய்யப்படும்.
சென்னை சென்ட்ரல் - திருச்சானூருக்கு ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில், திருச்சானூர் - சென்னை சென்ட்ரலுக்கு மேற்படி நாட்களில் மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில், அரக்கோணம் - வேலூருக்கு மேற்படி நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கும், வேலூர் - அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து
சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதிகாலை 4.05, மதியம் 2.25, மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை காலை 6.30, 9.10, 10.30, பகல் 11, நண்பகல் 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8.20, 9.10, 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதிகாலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, பகல் 11.15, நண்பகல் 12, மதியம் 1.40, பிற்பகல் 2.25, 3.40, மாலை 4.50, 6, இரவு 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில்கள், அரக்கோணத்துக்கு பதிலாக திருவாலங்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு செல்லும். இதுதவிர, அரக்கோணம் - சென்னை கடற்கரைக்கு மேற்படி நாட்களில் இயக்கப்படும் 4 மின்சார ரயில்களும் பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே மேற்படி நாட்களில் தலா இரண்டு மின்சார ரயில்களும் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.