தமிழகம்

சென்னை | மின்சார ரயில் சேவையில் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்​ரல் - கூடூர் மார்க்​கத்​தில் மீஞ்​சூர் - பொன்​னேரி ரயில் நிலை​யங்​களுக்கு இடையே பொறி​யியல் பணி நடக்​க​வுள்​ள​தால், மின்​சார ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

இதன்​படி, சென்னை சென்ட்​ரல் - கும்​மிடிப்​பூண்​டிக்கு பிப்​. 4, 6, 7 ஆகிய தேதி​களில் இரவு 11.20 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், மீஞ்​சூர் - கும்​மிடிப்​பூண்டி இடையே பகுதி ரத்து செய்​யப்​படும்.

          

கும்​மிடிப்​பூண்டி - சென்னை சென்ட்​ரலுக்கு பிப்​. 5, 7, 8 ஆகிய தேதி​களில் அதி​காலை 3.50 மணிக்கு புறப்பட வேண்​டிய மின்​சார ரயில், கும்​மிடிப்​பூண்டி - மீஞ்​சூர் இடையே பகுதி ரத்து செய்​யப்​படும்.

மைலம் - திண்​டிவனம் இடையே பொறி​யியல் பணி காரண​மாக, தாம்​பரம் - விழுப்​புரம் மெமு ரயில்சேவை​யில் பிப்​. 5, 7 ஆகிய தேதி​களில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

மெமு ரயில்: இதன்​படி, தாம்​பரம் - விழுப்​புரத்​துக்கு பிப்​. 5,7 ஆகிய தேதி​களில் காலை 9.40 மணிக்கு புறப்​படும் மெமு ரயில், திண்​டிவனம் - விழுப்​புரம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படும்.

விழுப்​புரம் - சென்னை கடற்​கரைக்கு மேற்​கண்ட தேதி​களில் மதி​யம் 1.30 மணிக்கு புறப்பட வேண்​டிய மெமு ரயில், விழுப்​புரம் - திண்​டிவனம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படும். இத்​தகவல், சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT