மழை | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கிழக்கு திசை காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக, தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று (டிச.9) முதல் 14-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​கு​டா, தென்​மேற்கு வங்​கக்​கடல், குமரிக்​கடல், அதை ஒட்​டிய மாலத்​தீவு பகு​தி​களில் 12-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். நேற்று காலை 8 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் திருநெல்​வேலி மாவட்​டம் ஊத்​து​வில் 8 செ.மீ., ​ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT