சென்னை: மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை கலைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டிருந்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். இக்குழுவானது முதல்கட்ட அறிக்கையையும் அப்போதைய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆக.7-ம் தேதி தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு மத்திய - மாநில உறவுகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான விவகாரங்களை ஆய்வுசெய்து பரிந்துரைவழங்குவது, நடைமுறையில் உள்ள சட்டங்களை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் அளிக்கப்பட்டன.
உயர்நிலைக் குழுவுக்கும், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்துக்கும் ஒப்படைக்கப்பட்ட பணிகளின் தன்மைக்கும் ஒற்றுமை இருப்பதாக உணர்ந்த தமிழக அரசு, உயர்நிலைக் குழுவை கலைத்து அரசாணை பிறப்பித்துள்ளது.
உயர்நிலைக் குழு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, உயர்நிலைக் குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவுகளையும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் உடனடியாக ஒப்படைக்க வும் உத்தரவிட்டுள்ளது. மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
இந்நிலையில் தமிழக அரசுஇந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கம்யூ னிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெ.சண்முகம்: மாநில அரசின்உரிமைகள் பாஜக அரசால் தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்தநிலையில் இந்த குழு அமைக்கப்பட்டது. இப்போதும் அந்த ஆபத்து தொடரும் நிலையில்,குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு கலைத்திருக்கக் கூடாது.
மு.வீரபாண்டியன்: அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து வைத்து கொண்டு மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது அதிகார,ஆதிக்கம் புரிகிறது. இதை ஆராய கடந்த ஆட்சியில் நீதிபதிகுரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவைக் கலைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.