கரூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மத்தியதடய அறிவியல் ஆய்வகக் குழுவினர். | படம்: க.ராதாகிருஷ்ணன் |

 
தமிழகம்

விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் மத்திய தடய அறிவியல் குழுவினர் கரூரில் ஆய்வு

செய்திப்பிரிவு

கரூர்: தவெக தலை​வர் விஜய்க்கு டெல்லி அலு​வல​கத்​தில் வரும் 12-ம் தேதி ஆஜராக சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்ள நிலை​யில், கரூர் வேலு​சாமிபுரத்​தில் மத்​திய தடய அறி​வியல் ஆய்வக (சிஎஃப்​எஸ்​எல்) குழு​வினர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் தவெக பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, இணைப் பொதுச் செய​லா​ளர் சிடிஆர்​.

நிர்​மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் மதி​யழகன் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் தங்​கவேல், எஸ்​.பி. ஜோஸ் தங்​கையா உள்​ளிட்ட காவல் அதி​காரி​கள் டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மைய கத்​தில் டிச. 29-ம் தேதி ஆஜராகினர். அவர்​களிடம் 3 நாட்​கள் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

மேலும், டெல்​லி​யில் உள்ள சிபிஐ தலை​மையகத்​தில் வரும் 12-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக தலை​வர் விஜய்க்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூரில் சம்​ப வம் நடந்த வேலு​சாமிபுரத்​தில் மத்​திய உள்​துறை அமைச்சக விவ​காரத் துறை அதி​காரி தலை​மை​யில் மத்​திய தடய அறி​வியல் ஆய்​வகக் குழு​வினர் 10-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டனர்.

விஜய்யின் பிரச்சார வாக​னம் நிறுத்​தப்பட்டிருந்த இடம், சாலை​யின் அகலம் உள்​ளிட்​ட​வற்றை அளவீடு செய்​தனர். அவற்றை வீடியோ பதிவு செய்​து, புகைப்பட​மும்​ எடுத்​துக்​ ​கொண்​டனர்​.

SCROLL FOR NEXT