தமிழகம்

நாளை நடைபெறுகிறது இந்திய கம்யூ.கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா நாளை நடை​பெறுகிறது. இதில் முதல்​வர் ஸ்டாலின் பங்​கேற்று தலைமை உரை​யாற்றுகிறார்.

இதுதொடர்​பாக, கட்​சி​யின் மாநில செயற்​குழு வெளி​யிட்ட அறிக்​கை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி, கான்​பூரில் நடை​பெற்ற மாநாட்​டில் நிறு​வப்​பட்​டது.

          

சிந்​தனை சிற்பி சிங்​கார​வேலர் தலைமை தாங்கி உரை​யாற்​றி​னார். இந்​தி​யா​வில் வர்க்​கங்​களற்ற, மதச்​சார்​பற்ற, சாதி​களற்ற, சுரண்​டலற்ற சோஷலிச சமூகத்தை படைப்​பது தான் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நோக்​கம்.

அதற்​கேற்ப, கட்சி தொடங்​கப்​பட்​டது முதல் விடு​தலைக்​காக போராடிய இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, மொழி, பண்​பாடு மற்​றும் உரிமை​களை பாது​காக்​க​வும், சாதிய கொடுமை​களை ஒழிக்​க​வும் ஏராள​மான போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது.

தொடர்ந்​து, ஜனநாயகம், மதச்​சார்​பின்​மை, மாநில உரிமை​கள், கூட்​டாட்சி கோட்​பாடு போன்​றவற்றை பாது​காக்க போராடி வரு​கிறது. இவ்​வாறு அளப்​பரிய தியாகங்​களை செய்​துள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா, சென்​னை, வள்​ளுவர் கோட்​டத்​தில் நாளை (1-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடை​பெறுகிறது.

கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில் நடை​பெறும் விழா​வில், முதல்​வர் ஸ்டாலின் பங்​கேற்று உரை​யாற்​றுகிறார். இவர்​களு​டன், திமுக கூட்​டணி கட்சி தலை​வர்​களும் பங்​கேற்று வாழ்த்​துரை வழங்​க​வுள்​ளனர். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT