தமிழகம்

சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் வெளிநாட்டு வேலை ஆசையில் சிக்கிவிடாதீர்கள்: இளைஞர்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வெளி​நாட்​டில் அதிக சம்​பளம் என கூறி இளைஞர்​களை ஏமாற்​றி, அவர்​களைக் கடத்​திச் சென்று சட்​ட​விரோதப் பணி​களில் ஈடு​படுத்​தும் “சைபர் அடிமைத்​தனம்” குறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு(சிபிஐ) கடும் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து சிபிஐ​யின் எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சைபர் குற்​ற​வாளி​கள் சமூக வலை​தளங்​கள் மற்​றும் போலி​யான ஏஜென்​சிகள் மூலம் வெளி​நாட்​டில் அதிக சம்​பளத்​தில் வேலை வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக கவர்ச்​சிகர​மான விளம்​பரம் செய்​கின்​றனர்.

இதனை நம்​பிச் செல்​லும் இளைஞர்​களின் பாஸ்​போர்ட் மற்​றும் முக்​கிய ஆவணங்​களை, அவர்​கள் அங்கு சென்​றடைந்​தவுடன் பறி​முதல் செய்​து​கொள்​கின்​றனர்.

பின்​னர் அவர்​களை ஓரிடத்​தில் சிறை​வைத்​து, மிரட்​டல் மற்​றும் வன்​முறை மூலம் சட்​ட​விரோத ஆன்​லைன் மோசடிகளில் ஈடு​படக் கட்​டாயப்​படுத்​துகின்​றனர். இதுவே ‘சைபர் அடிமைத்​தனம்’ என்று அழைக்​கப்​படு​கிறது.

எனவே, வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும்​போது, அந்த நிறு​வனம் மற்​றும் வேலைக்​குச் சேர்க்​கும் ஏஜென்ட் பற்​றிய முழு​மை​யான விவரங்​களை இளைஞர்​கள் சரி​பார்க்க வேண்​டும்.

முறை​யான சரி​பார்ப்பு இன்றி எந்​தவொரு ஏஜென்ட்​டுக்​கும் பணம் கொடுக்​கவோ அல்​லது அசல் ஆவணங்​களை வழங்​கவோ வேண்​டாம். மிகக் குறைந்த வேலை​யில் அதிக சம்​பளம் என்ற ஆசை வார்த்​தைகளைக் கண்டு இளைஞர்​கள் ஏமாற வேண்​டாம்.

நீங்​கள் அல்​லது உங்​களுக்​குத் தெரிந்​தவர்​கள் யாராவது இது போன்ற மோசடி​யில் சிக்​கி​யிருந்​தால் அல்​லது சந்​தேகத்​துக்​குரிய நடவடிக்​கைகள் தெரிந்​தால் உடனடி​யாகக் சைபர் க்ரைம் உதவி எண் 1930 மற்​றும் www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தில் உங்​கள் புகாரைப் பதிவு செய்​ய​லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT