தமிழகம்

டிஜிட்டல் கைது மோசடி வலையில் சிக்க வேண்டாம்: சிபிஐ எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: டிஜிட்டல் கைது மோசடி வலை​யில் சிக்க வேண்​டாம் என்று பொது மக்​களுக்கு சிபிஐ எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக ‘எக்​ஸ்’ வலை​தளத்​தில் சிபிஐ கூறி​யிருப்​ப​தாவது: சைபர் குற்​ற​வாளி​கள் தங்​களை சிபிஐ, காவல்​துறை, அமலாக்​கத்​துறை, இந்​திய ரிசர்வ் வங்கி போன்ற உயர் அரசு அமைப்​பு​களின் அதி​காரி​கள் எனக் கூறிக்​கொண்டு தொடர்பு கொள்​கின்​றனர்.

‘டிஜிட்​டல் கைது’ செய்​யப்​பட்​டுள்​ள​தாகக் கூறி மிரட்டி பெருந்​தொகை​யைப் பறிக்க முயல்​கின்​றனர். இத்​தகைய மோசடி வலை​யில் பொது​மக்​கள் யாரும் சிக்க வேண்​டாம்.

எந்​தவொரு அரசு அமைப்​பும் இணைய வழி​யாகவோ அல்​லது வீடியோ அழைப்பு மூல​மாகவோ யாரை​யும் கைது செய்​வ​தில்​லை.

எனவே, பொது​மக்​கள், இது​போன்ற மிரட்​டல் அல்​லது போலி அழைப்​பு​கள் வந்​தால், உடனடி​யாக இணைப்​பைத் துண்​டிக்க வேண்​டும்.

உங்​களின் தனிப்​பட்ட ஆவணங்​கள், வங்​கிக் கணக்கு விவரம் அல்​லது ஓடிபி எண்​களை யாரிட​மும் ஒரு​போதும் பகிர வேண்​டாம்.

இது​போன்ற இணை​ய​வழி மோசடி மிரட்​டல்​களை எதிர்​கொண்​டாலோ அல்​லது பாதிக்​கப்​பட்​டாலோ உடனடி​யாக 1930 என்ற சைபர் குற்ற எண்​ணிலும், www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தி​லும் புகார் அளிக்​கலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT