தமிழகம்

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு: மின்வாரிய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள் ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2021-23 காலகட்டத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி கள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. ‘கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்ட தால்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அறப்போர் இயக்கம் தரப்பில் கூறப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இதேபோல, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 வாரத்துக்குள் ஒப்ப டைக்க வேண்டும் என உத்தர விட்டது.

மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மின்மாற்றிகள் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள் ளது.

SCROLL FOR NEXT