ஜஸ்​டின் மணி​கண்​டன்

 
தமிழகம்

பழநி நில மோசடி வழக்கில் சார் பதிவாளரிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பழநி​யில் ரூ.100 கோடி நில மோசடி விவ​காரம் தொடர்​பாக குற்​றம் சாட்​டப்​பட்ட சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டனிடம் நேற்று சிபிசிஐடி போலீ​ஸார் தொடர்ந்து 7 மணி நேரம் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​தின் ரூ.100 கோடி மதிப்​பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடி​யாக பத்​திரப் பதி​வானது தொடர்​பான புகாரின்பேரில் சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், அறக்​கட்​டளை நிர்​வாகிமுரு​க​தாஸ் உள்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரிக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சார்பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன் நேற்று காலை 10 மணி​யள​வில் திண்​டுக்​கல்​லில் உள்ள சிபிசிஐடி அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜரா​னார். அவரிடம் மடத்​தின் நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்​தது தொடர்​பாக சிபிசிஐடி டிஎஸ்பி அஜய்​தங்​கம் விசா​ரணை நடத்​தி​னார்.

தொடர்ந்து 7 மணிநேரம் விசா​ரணை நடந்த நிலை​யில், மாலை 5 மணிக்கு மேல் அவரை அங்​கிருந்து சிபிசிஐடி போலீ​ஸார் அனுப்​பி​வைத்​தனர். மீண்​டும் இன்று (செவ்​வாய்க்​கிழமை) விசா​ரணைக்கு ஆஜராக வேண்​டும் என்று அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT