தமிழகம்

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய உத்தரவிட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

இன்பதுரை எம்.பி., அமலாக்கத் துறை தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ரூ.1,000 கோடி லஞ்​சப் புகார் குறித்து அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட்ட விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, அமலாக்​கத் துறை தரப்​பில் கேவியட் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்பட்​டுள்​ள​தாக​வும் உதவி பொறி யாளர், இளநிலை பொறி​யாளர், நகரமைப்பு அலு​வலர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​களுக்​குத் தலா ரூ.25 லட்​சம் முதல் ரூ. 35 லட்​சம் வரை லஞ்​சம் வசூலிக் கப்​பட்டு பணிநியமனம் நடந்​துள்​ள​தாக​வும் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடந்த ஆண்டு அக். 27-ல் கடிதம் அனுப்​பியது.

          

அதில், துறை அமைச்​சர் கே.என்​.நேருவின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணனுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யின்​போது கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் மிகப்​பெரிய முறை​கேடு நடந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை தெரி​வித்து 3 முறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்​பியது.

இந்தக் கடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு, அவரது சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவன்​ணன் உள்​ளிட்​டோர் மீது ஊழல் வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்​கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் மற்​றும் அதி​முக எம்​.பி. இன்​பதுரை ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் தனித்​தனி​யாக வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், அமலாக்​கத் துறை தந்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சட்​ட நடவடிக்கை எடுக்க பிப்.20-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்தனர். இதை விசா​ரிக்​கும்​போது தங்​களது தரப்பு கருத்​தை​யும் கேட்ட வேண்​டும் எனக் கோரி, அதிமுக எம்​.பி. இன்​பதுரை சார்​பில் வழக்​கறிஞர் பாலாஜி சீனி​வாசன், அமலாக்​கத் துறை வழக்​கறிஞர் அரவிந்த் குமார் சர்மா ஆகியோர் கேவியட்​ மனுக்​களைத்​ தாக்​கல்​ செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT