தமிழகம்

மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா லூப் சாலை​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக்​கோரி தொடரப்​பட்ட வழக்கு வாபஸ் பெறப்​பட்​ட​தால், அந்த வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

சென்​னை, மெரினா கடற்​கரை​யின் கலங்​கரை விளக்​கம் முதல் பட்​டினப்​பாக்​கம் வரை உள்ள லூப் சாலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும்​படி சென்னை உயர்​நீ​தி​மன்​றம் கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் உத்​தர​விட்​டது.

          

இருப்​பினும் அப்​பகு​தி​யில் ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட​வில்லை எனக்​கோரி, ஆனந்த் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், லூப் சாலையை ஆக்​கிரமித்து சாலை​யோரங்​களில் உணவகங்​கள் அனு​ம​தி​யின்றி வணிக நோக்​கில் நடத்​தப்​படு​வ​தாக​வும், இந்த ஆக்​கிரமிப்​பு​களை அதி​காரி​கள் கண்​டு​கொள்​வ​தில்லை என கூறி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, அப்​பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென ஏற்​கெ​னவே உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ள நிலை​யில் மீண்​டும் எப்​படி உத்​தரவு பிறப்​பிக்க முடி​யும் எனக்​கேள்வி எழுப்​பிய நீதிப​தி​கள், ஒரு​வேளை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை என்​றால் அதை எதி்ர்த்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தானே தொடர முடி​யும், என்​றனர்.

அதையடுத்​து, மனு​தா​ரர் தரப்​பில், இந்த மனுவை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள் இந்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT