தமிழகம்

எம்.பி. ஜோதிமணி குறித்து அவதூறு: கரூர் பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்​னை/கரூர்: திமுக ஆட்​சி​யில் பெண்​களுக்கு எதி​ராக நடக்​கும் அநீ​தி​களை கண்​டித்து பாஜக மகளிரணி சார்​பில் கரூரில் பிப்​.10-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்​றுப் பேசிய பாஜக மாவட்​டத் தலை​வர் வி.​வி.செந்​தில்​நாதன், காங்​கிரஸ் எம்​.பி.ஜோதிமணியை அவதூறாக பேசி​ய​தாக கூறப்​படு​கிறது. இதற்கு ஜோதிமணி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

          

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட வீடியோ பதி​வில், “பொது​வாழ்​வில் பங்​கேற்​கும் பெண்​களை வேசிகளாகச் சித்​தரிக்​கும் இத்​தகைய அழுகிப்​போன மனநிலை கொண்​ட​வர்​களுக்கு எதி​ராக் சமூகம் திரள வேண்​டும் என்​ப​தற்​காகவே இந்த வீடியோவை வெளி​யிடு​கிறேன்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

எம்​.பி ஜோதிமணி குறித்து பாஜக நிர்​வாகி அவதூறாக பேசி​யிருப்​ப​தற்​கு, காங்​கிரஸ் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்ட பலரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதனிடையே, ஜோதிமணியை அவதூறாக பேசி​ய​தாக காங்​கிரஸ் தரப்​பில் அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில், பாஜக மாவட்​டத் தலை​வர் வி.​வி.செந்​தில்​நாதன் மீது 5 பிரிவு​களின் கீழ் கரூர் நகர போலீ​ஸார் நேற்றுமுன்தினம் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT