தமிழகம்

சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: தவெக வேட்​பாள​ரான சினோரா அசோக் மீது தாக்​குதல் நடத்​திய குற்​றச்​சாட்​டில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​வும், தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் சினோரா அசோக்​கும் போட்​டி​யிட்​டனர்.

இதில் சேகர்​பாபு வெற்றி பெற்று எம்​எல்ஏ ஆனார். முன்​ன​தாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற ஏப்​ரல் 23-ம் தேதி மண்​ணடி அங்​கப்​பன் நாயக்​கன் தெரு​வில் சேகர்​பாபு, சினோரா அசோக் தரப்​பினரிடையே வாக்​கு​வாதம், தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

அப்​போது சேகர்​பாபு தன்னை தாக்​கிய​தாக சினோரா அசோக் வடக்கு கடற்​கரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். மேலும் சேகர்​பாபு தரப்​பிலும் எதிர்​தரப்​பினர் மீது புகார் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் சினோரா அசோக் அளித்த புகாரின் பேரின் வடக்கு கடற்​கரை காவல் நிலைய போலீ​ஸார் சேகர்​பாபு மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் மீது சட்ட விரோத​மாகக் கூடு​தல், ஆபாச​மாகப் பேசுதல், காயம் விளை​வித்​தல், கொலை முயற்​சி, கொலை மிரட்​டல் உட்பட 7 பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT