தமிழகம்

மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் மீன்​பிடி தடைக்​கால நிவாரண​மாக ரூ.20 ஆயிரம் வழங்​கக்​கோரிய வழக்​கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக கடல் பகு​தி​களில் ஏப்​ரல், மே, ஜுன் மாதங்​களை மீன் உள்​ளிட்ட கடல்​வாழ் உயி​ரிகளின் இனப்​பெருக்க கால​மாக, மத்​திய மீன்​வளத்​துறை அமைச்​சகம் கண்​டறிந்​துள்​ளது. மீன் வளத்தை பெருக்​கும் நோக்​கில் இந்தக் காலகட்​டத்​தில் விசைப்​படகு​கள், இழு​வைப் படகு​கள் மூலம் மீன்​பிடிக்​கத் தடை விதிக்​கப்​படு​கிறது.

அதன்​படி தமிழகத்​தில் இந்த ஆண்​டுக்​கான 61 நாள் மீன்​பிடித்தடைக்​காலம் ஜுன் 14 தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ராம​நாத​புரம் மோர்​பண்​ணை​யைச் சேர்ந்த தீரன் திருமுரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில், தமிழகத்​தில் மீன்​பிடி தடைக்​கால நிவாரண​மாக மீனவர்​களுக்கு ரூ.8,000 வழங்​கப்​படு​கிறது. இந்த தொகை மீனவர்​களின் வாழ்​வாதா​ரத்​துக்கு போது​மானதாக இல்​லை.

ஆந்​தி​ரா, கோவா, மேற்கு வங்​காளம் மாநிலங்​களில் மீன் பிடி தடைக் காலத்​தில் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்​கப்​படுகிறது. அதேப்​போல் தமிழகத்​தி​லும் நிவாரணம் வழங்க உத்​தர​விட வேண்​டும் என கூறப்​பட்​டிருந்​தது. மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது.

மனு​தா​ரர் தரப்​பில், பிற மாநிலங்​களைப் போல தமிழகத்​தி​லும் ரூ.20,000 நிவாரணம் வழங்​கப்​படும் என ஆட்​சிக்கு வந்​துள்ள தவெக தரப்​பில் தேர்​தல் வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டது எனக் கூறப்​பட்​டது.

அரசு தரப்​பில், மீனவர்​களுக்கு நிவாரணம் வழங்​கு​வது அரசின் கொள்கை முடிவு எனக் கூறப்​பட்​டது. பின்​னர் நீதிப​திகள், மனு தொடர்​பாக உள்​துறை செயலர், நிதித்​துறை செயலர் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை 2 வாரங்​களுக்கு தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT