சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம் 
தமிழகம்

4 கோடி மோசடி செய்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு: ஆளுங்கட்சி எனக்கூறி மிரட்டுவதாக புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்​குடி தொகு​தி​யில் போட்​டி​யிட தேர்​தல் செல​வுக்கு வாங்​கிய தொகை​யில் ரூ.4 கோடியை திருப்​பித்​த​ராமல் மோசடி செய்​து​விட்​ட​தாக முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட வழக்​கறிஞர் டி.தன​விமல், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தேர்தல் செலவுக்கு ரூ.5 கோடிகடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்து விண்​ணப்​பித்​திருந்​தேன்.

அப்​போது அதி​முக புதுக்​கோட்டை மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்த முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்​பளித்​தால் தேர்​தல் செல​வுக்கு ரூ.5 கோடி இருப்​பதை நிரூபிக்​கும் வகை​யில் அந்த தொகையை தான் சொல்​லும் நபரிடம் கொண்​டு​வந்து தருமாறு கூறி​னார். வேட்​பாள​ராக பெயர் அறிவிக்​கப்​பட்​டதும் அந்​தத் தொகையை திருப்பி தந்​து​விடு​வேன் எனவும் உறு​தி​யளித்​தார்.

அதன்​படி அவர் கூறியது​போல ரூ.4.50 கோடியை கடன் வாங்கி, அவர் கூறிய ஒப்​பந்​த​தா​ர​ரான சோத்​துப்​பாலை முரு​கேசன் என்​பவரிடம் கொடுத்​தேன். ஆலங்​குடி தொகுதி வேட்​பாள​ராக என்னை கட்​சித் தலைமை அறி​வித்​தது. அதையடுத்து தேர்​தல் செல​வுக்கு பணம் இல்​லாத​தால் கொடுத்த தொகையை திருப்​பித் தரும்​படி கேட்​ட​போது ரூ.50 லட்​சத்தை மட்​டும் திருப்பி கொடுத்​தனர். மீத​முள்ள ரூ.4 கோடியை தராமல் இழுத்​தடித்து வந்​தனர்.

தற்​போது விஜய​பாஸ்​கர் தவெக​வுக்கு சென்​றுள்ள நிலை​யில், ஆளுங்​கட்சி எனக்​கூறி என்னை மிரட்டி வரு​கிறார். ரூ.4 கோடியை திருப்​பித்​த​ராமல் மோசடி செய்​யும் நோக்​குடன் செயல்​பட்​டு​வரும் முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்து நடவடிக்கை எடுக்​கக்​கோரி, புதுக்​கோட்டை மாவட்ட எஸ்​பி​.யிடம் புகார் அளித்​தும் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை.

எனவே இதுதொடர்​பாக விஜய​பாஸ்​கர் உள்​ளிட்​டோர் மீது வழக்​குப்​ப​திவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்​தர​விட வேண்​டும், இவ்​வாறு மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார். இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது.

SCROLL FOR NEXT