சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

 
தமிழகம்

பேரவைத் தலைவர் அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதற்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அ​தி​முக எம்​எல்​ஏக்​கள் 21 பேரின் தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிட்ட தமிழக சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிரபாகரின் முடிவுக்கு எதி​ராக தேசிய மக்​கள் சக்தி கட்சித் தலை​வர் எம்​.எல்​.ரவி உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்தாக்​கல் செய்​துள்​ளார்.

அந்த மனு​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது 25 அதி​முக எம்​எல்​ஏக்​கள் அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதைத் தொடர்ந்து கொறடா உத்​தரவை மீறிய எம்​எல்​ஏக்​கள்மீது கட்​சித் தாவல் தடை சட்​டத்​தின்​கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்​கக் கோரி அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேர​வைத்தலை​வ​ருக்கு மனு கொடுத்​தார்.

இந்​நிலை​யில் 25 எம்​எல்​ஏக்​களில் 4 பேர் ராஜினமா செய்​தனர். அதேவேளை​யில் 21 பேர் அதி​முக தலை​மைக்கு மன்​னிப்​புக் கடிதம் கொடுத்​தனர். இதைத் தொடர்ந்து அவர்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்​பப்​பெற்று கொள்​வ​தாக அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேர​வைத் தலை​வ​ருக்கு கடிதம் எழு​தி​னார். அதனை ஏற்​றுக்​கொண்டு எந்த விசா​ரணை​யும் இன்றி எம்​எல்​ஏக்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிடு​வ​தாக ஜே.சி.டி. பிர​பாகர் அறி​வித்​தார்.

பேர​வைத் தலை​வரின் இந்த செயல் அரசி​யல் சாசனத்​துக்கு எதி​ரானது என்​றும் கட்​சித் தாவல் நடவடிக்கை தொடங்​கியபின்​னர் இவ்​வாறு மன்​னிப்பு வழங்க முடி​யு​மா, எம்​எல்​ஏக்​கள் மீதான நடவடிக்​கையை கைவிட முடி​யு​மா, இது​போன்ற உத்​தர​வு​களை பிறப்​பிக்க பேர​வைத்தலை​வ​ருக்கு அதி​காரம் உள்​ளதா என்​பது குறித்து உச்ச நீதி​மன்​றம் விரி​வான விளக்​கத்​துடன் கூடிய உத்​தரவை பிறப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அந்த மனுவில் கூறி​யுள்​ளார். இந்த மனு​வானது உச்ச நீதி​மன்​றத்​தில் விரை​வில் விசா​ரணைக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT